இளைஞர்கள் யாழில் அமைச்சருடன் வாக்குவாதம்!
யாழ்ப்பாணத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
பருத்தித்துறை – பொன்னாலை வீதி புனரமைப்பு பணிகளுக்காக கடந்த அரசாங்கம் நிதி ஒதுக்கி இருந்து, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது. அந்நிலையில் தற்போது, மீள அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய மக்கள் சக்தியினர் தாம் புதிதாக புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதாக காட்டுகின்றனர் என கூறியே அப்பகுதி இளைஞர்கள் கடற்றொழில் அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பொன்னாலை – பருத்தித்துறை கரையோர பிரதான வீதி புனரமைக்கும் பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (13) இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
கருத்துகள் இல்லை