இலங்கை இன்று அரையிறுதியில் பலப்பரீட்சை!


சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணி மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இன்று (14) மோதவுள்ளது.


இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியாகவே ராய்ப்பூர், ஷஹீத் வீர் நாராயன் சிங் சர்வதேச அரங்கில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.


சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் இலங்கை அணி ஆரம்ப சுற்றில் ஆடிய 5 போட்டிகளில் 4 இல் வென்று ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றே அரையிறுதிக்கு முன்னேறியது. மறுபுறம் பிரையன் லாரா தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி ஐந்து லீக் போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்தமை குறிப்பிடத்தக்கது.


இந்தத் தொடரில் இலங்கை சார்பில் குமார் சங்கக்காரவுடன், உபுல் தரங்க மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் துடுப்பாட்டத்தில் சோபித்து வருவதோடு பந்துவீச்சில் இசுர உதான மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.


குறிப்பாக டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் இலங்கை சார்பில் குமார் சங்கக்கார மற்றும் உபல் தரங்க ஆகியோர் சதங்களை பெற்று இலங்கை அணியின் வெற்றிக்கு உதவி இருந்தனர்.


இந்தத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) இதே ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.