தியாகதீபத்திடம் ஆசிர்வாதம் வாங்கிக் வேட்புமனுத் தாக்கல்!📸


நடைபெற உள்ள உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது.


 

தியாகதீபத்திடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் 19.03.2025 யாழில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களில் 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.


இதிலே கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசிய கட்சியின் சார்பாக திரு.சிவாஜிலிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.