செல்ல பூனை இறந்த துக்கம்... 2 நாட்கள் காத்திருந்து தற்கொலை செய்த இளம்பெண்!
அம்ரோஹா,உத்தர பிரதேசத்தில்
அம்ரோஹா மாவட்டத்தில் ஹசன்பூர் நகரில் வசித்து வந்தவர் பூஜா (வயது 36). 8 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. பின்னர், 2 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்று விட்டு, பெற்றோர் வீட்டில் தாயார் கஜ்ரா தேவியுடன் வசித்து வந்துள்ளார். தனிமையை போக்க, செல்ல பிராணியாக பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறார்.அதற்கு ஆடைகளை அணிவித்து, பாதுகாப்பாக வளர்த்து மகிழ்ந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அந்த பூனை இறந்து விட்டது. அப்போது அதனை அடக்கம் செய்து விடலாம் என தேவி கூறியுள்ளார். ஆனால், அது உயிர் பெற்று திரும்பி வந்து விடும் என கூறி அதற்கு பூஜா மறுத்து விட்டார்.2 நாட்களாக பூனையின் உடலை உடன் வைத்திருக்கிறார். அவருடைய தாயார் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் கூறியும் பிடிவாதத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில், 3-வது நாளான நேற்று மதியம் வீட்டின் 3-வது தளத்தில் உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். யாரும் அவரை தேடவில்லை.இரவு 8 மணியளவில் பூஜாவின் அறைக்கு தேவி சென்றபோது, அவர் மின் விசிறியில் தூக்கு போட்டபடி காணப்பட்டார். இறந்த பூனை, அவருக்கு பக்கத்தில் தரையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தி, கூச்சல் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து, நிலைமையை கவனித்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். தடயவியல் குழுவினரும் சென்று தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. செல்ல பிராணியாக வளர்த்த பூனை உயிரிழந்த துக்கத்தில், அது திரும்ப உயிருடன் வந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த பூஜா, 3-வது நாளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
கருத்துகள் இல்லை