அது சிறை­யல்ல வதை முகாம்.

 


நிலத்­துக்கு அடி­யி­லேயே அது அமைந்­துள்­ளது. நான் உள்­ளிட்ட எனது குழு மிகுந்த சிர­மத்­துக்கு மத்தியிலேயே அங்கு சென்றோம்.


அதற்குள் கொடிய விஷப்­பாம்­புகள் இருந்­தன. ஆயி­ரக்­க­ணக்­கான வௌவால்கள் இருந்­தன. உள்ளே செல்ல முடி­ய­வில்லை. ஒரு வகையான வாயு வெளி­வந்து கொண்­டி­ருந்­தது.


எல்­லோ­ருக்கும் இருப்­பது  ஒரே ஒரு மல­ச­ல­கூடம். அது வர்த்­த­மா­னிப்­ப­டுத்­தப்­பட்ட சிறையும் அல்ல. மனிதன் ஒரு­வனை தடுத்து வைக்க எந்த வகை­யிலும் பொருத்­த­மற்­றது.


தற்போது வெளிநாடொன்றில் தஞ்சமடைந்திருக்கும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி திரு   நிஸாந்த டீ சில்வா, திருகோணமலை  ‘கன்சைட்-Gun Site’ வதை முகாமை இவ்வாறு  அடையாளம் காட்டியிருந்தார் 


அதே போல ஐ.நா.வின் குழு­வொன்றும்  ‘கன்சைட்-Gun Site’ வதை முகாம் தொடர்­பான தக­வல்­களை அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.


முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மற்றும் ரியல் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆயோயோரின் துணையுடன் கடற்படையால்  ‘கன்சைட்-Gun Site’ வதை முகாம் இயக்கப்பட்டிருந்ததும் தெரியவந்திருந்தது  


குறிப்பாக கடற்­ப­டையை சேர்ந்த லெப்­டினன்ட் கொமாண்­டர்­க­ளான சம்பத் முன­சிங்க, ஹெட்டியாராட்சி  ஆகியோர் தலை­மை­யி­லான குழுவால் கொழும்பில் கடத்தப்பட்ட 11 தமிழ் மாணவர்கள் 'கன்சைட்-Gun Site’ வதை முகாமில் தடுத்து வைத்து கொ*ன்றமைக்கு ஆதாரங்கள் இருக்கின்றது 


அதே போல 'கன்சைட்-Gun Site’ வதை முகாம்  பொறுப்பதிகாரியாக இருந்த சுமித் ரணசிங்க  அவர்களுடன் கோத்தபாயா ராஜபக்சே தொடர்பில் இருந்தார் என்பதை International Truth and Justice Project (ITJP)  உறுதிப்படுத்தி இருந்தது.


இது தவிர கிழக்கு மாகாண கட்டளை அதிகாரியாக இருந்த எஸ் எம் பி வீரசேகர , பிரதி கட்டளை அதிகாரியாக இருந்த சிசிர ஜெயக்கொடி போன்றவர்களுடன் கோத்தபாயா ராஜபக்ஷே அவர்களும் 'கன்சைட்-Gun Site’ செல்வதற்கான அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள் என்பதும்  அம்பலப்படுத்தப்பட்டு இருந்தது.


திருமதி யஸ்மின் சூக்காவின் International Truth and Justice Project (ITJP)  'கன்சைட்-Gun Site’ அமைந்திருந்த இடம், அதன் அதிகாரிகள், சித்திரவதைகளை மேற்கொண்டவர்கள்,  உட்பட்ட பல தகவல்களை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் வழங்கியிருந்தது 


இங்கு குறைந்தது 700 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது 


விசேடமாக யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட பலரும் பருத்தித்துறையிலிருந்து படகுகள் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டதாகவும்  பதிவு செய்யப்பட்டுள்ளது 


அச்செழு இராணுவ முகாம், ஜோசப் இராணுவ முகாம், வேப்பங்குளம் (CID) முகாம், கொழும்பு விமான நிலைய பயங்கரவாத புலனாய்வு திணைக்களம், பூசா தடுப்புமுகாம், கபரண இராணுவ முகாம், வெலிகந்த முகாம் என  தமிழர்களை வேட்டையாடிய   வதை முகாம்களில் 'கன்சைட்-Gun Site’ முக்கியமானது 


கொழும்பில் பணத்திற்க்காக கடத்தி காணாமலாக்கப்பட்ட ராஜீவ் நாகநாதன் என்கின்ற மாணவர் 'கன்சைட்-Gun Site’  முகாம் தடுப்பிலிருந்தவாறு தன் தாயாரோடு பேசிய சந்தர்ப்பத்தில் பல உண்மைகளை வெளிப்படுத்திருக்கின்றார் 


குறிப்பாக அங்கு சுமார் 18 முதல் 20 வயதுடைய பல இளைஞர் யுவதிகள  சுட்டு படுகொ*லை செய்கின்றனர் என்பதையும் அங்குள்ள கழிவறை எங்கும் இ*ரத்*தக்கறை பரவியிருந்ததையும்  சொல்லியிருக்கின்றார் 


2015 இற்கு பின்னர் 'கன்சைட்-Gun Site’  முகாம் கொடுமைகள் தொடர்பான முழுமையான தகவல்கள் அம்பலமாகி விட்ட பின்னரும் வசந்த கரன்னகொட உட்பட யாரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை 


திரு மைத்திரிபால சிறிசேனா முதல் திரு ரணில் விக்ரமசிங்கே வரையான ஆட்சியாளர்கள் சகல குற்றவாளிகளையும்  பாதுகாத்தார்கள் 


இது போதாதென்று இன்றைக்கு 'பட்டலந்த வதை முகாம்' குறித்து பேசும் ஜேவிபி 'கன்சைட்-Gun Site’ வதை முகாம் சூத்திரதாரிகளில் ஒருவரான கடற்படை தளபதி சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க அவர்களை துறைமுக அதிகார சபையின் தலைவராக நியமித்துள்ளது 


இந்த ஜேவிபி  தான் இலங்கையராக ஒன்றுபடுமாறு  எங்களுக்கு அழைப்பு விடுகின்றது.


20 நாட்களாக பொலிஸ் மா அதிபரை ஒழித்து வைத்து நாடகமாடும் ஜேவிபி தன் நிர்வாக பலவீனங்களை மறைக்க பட்டலந்த அறிக்கையை வைத்து வேஷம் போடுகின்றது 


இவர்கள்  எங்களுக்கு மட்டுமின்றி யாருக்கும் நீதியை பெற்று தர மாட்டார்கள் 


படம் :'கன்சைட்-Gun Site’ வதை முகாம்  வாசல்

இனம் ஒன்றின் குரல்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.