கடமையின் போது உறங்கிய தொடருந்து சமிக்ஞை அதிகாரிகள் பணி இடைநீக்கம்!!
பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பொடிமெனிக்கே தொடருந்து பயணித்தின் போது கடமையிலிருந்த இருவரும் உறங்கிய நிலையில், குறித்த தொடருந்து கண்டி தொடருந்து நிலையத்தின் 3ஆவது மேடையை சென்றடைந்ததுள்ளது.
அந்த நேரத்தில் தொடருந்து சமிக்ஞைகள் உரிய முறையில் ஒளிராததால், குறித்த மேடையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு தொடருந்துடன் மோதி ஏற்படவிருந்த விபத்து, தொடருந்து சாரதியின் சாதுர்யத்தால் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்களின் கவனக்குறைவினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்தள்ளது.
கருத்துகள் இல்லை