பாடசாலைகளுக்கு சிறந்த வழிகாட்டிகளாக தம்மை அடையாளப்படுத்திச் சென்ற மாணவர்கள்!
பரீட்சைகள் முடிந்த பின்னர் தங்கள் சட்டைகளில் மை அடித்து விளையாடும் மாணவர் மத்தியில் தங்கள் பாடசாலைச்சூழலைத் தூய்மைப்படுத்தி பாடசாலை மதிலுக்கு வர்ணம் பூசி மகிழ்ந்த பாடசாலை மாணவர்களின்களின் முன்மாதிரிச் செயற்பாட்டுகள்.
இந் முறை கல்வி பொது சாதாரணதர பரீட்சைக்கு தோற்றியமாணவர்கள் தமது பரீட்சையின் இறுதிநாளான நேற்று முன்தினம் (26)தமது கல்வி பயின்ற பாடசாலையினை தூய்மை படுத்தி சென்றுள்ள விடயம் அனைவறாலும் பேசும் பொருளாக மாறியுள்ளது . பல பாடசாலைகளில் மிக மோசமான வகையில் நிறங்களை பூசியும் ஏனைய மாணவர்களுக்கு உபாதைகளை ஏற்படுத்தும் வகையிலும், ஏனையவர்களால் முகம் சுளிக்கும் வண்ணம் நடந்துகொள்ளவதை அவதானிக்க முடிந்த தருணங்களில் இவ்வாறான செயற்பாடானது வரவேற்புக்குரியது என பாராட்டப்படுகின்றது.
இம்முறை பரீட்சை எழுதிய இவ் மாணவர்கள் தங்கள் பாடசாலைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் பின்னால் வருகின்ற ஏனைய மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக தடம் பதித்து சென்றுள்ளார்கள்.
அந்த வகையில் கிளிநொச்சி,கோணாவில் மகா வித்தியாலயம், செல்வாநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை. முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி மாணவர்களின் ஆரோக்கியமான செயற்படே இவ்வாறு அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை