நோன்பு பெருநாளில் காசாவில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்!📸
நோன்பு பெருநாளின் முதல் நாளில் காசாவில் இஸ்ரேலியப் படைகள் நடாத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 64 பேர் வரை இறந்து இருக்கலாம் என பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதே வேளை தெற்கு காசாவில் உள்ள ரஃபா அருகே கடந்த வாரம் இஸ்ரேலியத் தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தில் இருந்து, 8 பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டி (PRCS) மருத்துவர்கள், 5 சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு ஐ.நா. ஊழியர் என 14 பேரின் உடல்களை மீட்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை