செம்மணி மனிதப் புதைகுழிக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்!
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் சாட்சியங்கள் அழிக்கப்படுவதை தடுக்க இதுபெரிதும் உதவும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நீதியமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் கொக்குத்தொடுவாய் மற்றும் மன்னார் பாலத்துக்கு அருகில் சதொச கட்டிட தொகுதியில் மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்.செம்மணியில் மனித எச்சங்கள் காணப்பட்டன. அதனை நான் நேரில் சென்று அவதானித்தேன்.
இது குறித்து நீதிமன்றுக்குத் தெரிவிக்கப்படவுமில்லை. எங்கள் கட்சி உறுப்பினர்களில் ஒருவர் மயானத்தை நிர்வகிக்கும் குழுவிலும் உள்ளார். அவரிடம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினேன். அதன்பின்னர், நீதிபதிகள் தலையிட்டனர்.
மன்னார், கொக்குத்தொடுவாய் ஆகிய இரண்டு இடங்களிலும் இழுபறி நிலையே காணப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணத்தில் செம்மணியிலும் ஆதாரங்கள் சிதைக்கப்பட்டு அழிக்கப்படலாம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை