CCL 2025: கோப்பையை கோட்டை விட்ட சென்னை ரைனோஸ்!


செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் முதல் போட்டியிலேயே சென்னை அணி வெற்றியை தவறவிட்டது. அதன் பின்னர் சிறப்பாக ஆடி ஃபைனல்ஸ் வரை வந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை சென்னை அணி வீழ்த்தியதும் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், இறுதிப்போட்டியில் ரொம்பவே சுமாரான ஆட்டத்தை ஆடி பஞ்சாப் அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஹார்டி சாந்து பந்துவீச்சை தேர்வு செய்தார். நேற்றைய போட்டியில் விக்ராந்த் டாஸ் வென்று வெற்றியை பெற்ற நிலையில், அதே ரூட்டை பஞ்சாப் அணி இன்று கடைபிடித்து வென்றது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.