பிக் பாஸுக்கு போனா ஹீரோவாக முடியாது!


தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டால் நிச்சயம் பிரபலமாகிவிடலாம் என்பதற்காக, இந்த நிகழ்ச்சியில் போட்டா போட்டி கொண்டு பல கலந்து கொண்டு வருகின்றனர். அப்படி ஒரு கனவோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் வர்மா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனா பெரிய ஆளாலெல்லாம் ஆகமுடியாது என வெளிப்படையாக பேசி உள்ளார். அண்மையில் முடிவடைந்த பிக் பாஸ் எட்டு சீசனை நடிகர் விஜய்சேதுபதிஅவர்கள் தொகுத்து வழங்கினார். இதில், பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் டைட்டிலை முத்துக்குமரன் பெற்றார். இரண்டாம் இடத்தை சௌந்தர்யாவும், மூன்றாம் இடத்தை ராயனும் பெற்றனர். இதில், பலரின் மனம் கவர்ந்து சிறப்பாக விளையாடிய ஜாக்குலின் டைட்டிலை பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் பணப்பெட்டி டாஸ்கில் தாமதமாக வந்ததால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். "அப்பா தப்பான அட்வைஸ் கொடுத்தார்.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பாக்குறாரு.. வனிதா பளீச்!" விஜய் வர்மா: பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்ட விஜய் வர்மா,யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், சினிமா தான் என் வாழ்க்கை என்கிற முடிவோடு தான் இந்த துறைக்கு வந்தேன். இன்னும் 30 வருஷம் ஆனாலும் நான் சினிமாவில் தான் இருப்பேன். ஏன் என்றால் எனக்கு இது மட்டும் தான் தெரியும். எப்படியாவது எதையாவது செய்துவிடவேண்டும் என நினைத்தால் இது வேலைக்கு ஆகாது. இத்தனை வருஷம் வீணா போச்சே என்று வருத்தப்பட மாட்டேன். சினிமாவில் என் பயணம் மெது மெதுவாக சென்று கொண்டு இருக்கிறது. என்னடா ஜெயிக்க முடியவில்லையே என நான் வருத்தப்பட்டு விட்டு இதை விட்டுவிட்டால் என் கேரியரே வீணா போய்டும். பெரிய ஆளாலெல்லாம் ஆகமுடியாது: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனால் மட்டும் பட வாய்ப்புகளை தேடி வராது, நான் பிக் பாஸ் வீட்டுக்குள் போய் வந்துவிட்டேன். நான் ஹீரோ ஆகிவிடுவேன் என்பதையெல்லாம் நடக்காத விஷயம். ஜீரோவாக தான் முடியும் அப்படியெல்லாம் நினைத்து விடாதீர்கள். பிக் பாஸ் உள்ள போயிட்டு வந்தா நீங்க யார் என்று இந்த ஊருக்கு தெரியும் அவ்வளவுதான். அது ஒரு ரியாலிட்டி ஷோ அவ்வளவு தான். அப்படியே ஹீரோ ஆனாலும் ஒரு படம் நடிப்பீங்க, அந்த ஒரு படத்துல நீங்க சிக்ஸர் அடிச்சு ஆகணும் அப்படி நீங்க அந்த படத்துல சிக்ஸர் அடிக்கவில்லை என்றால் அப்படியே உங்களை முடித்து விட்டுடுவாங்க. அந்த நிகழ்ச்சி ஒரு நல்ல நிகழ்ச்சி அதன் மூலம் நீங்கள் பலருக்கு தெரிவீர்கள். அதற்கு உதாரணம் தான் ஹரீஷ் கல்யான், கவின் அவர்களை சொல்லாம் என்றார். தொடர்ந்து பேசிய விஜய் வர்மா, பெரிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறேன், இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும்.அதுமட்டுமில்லாமல் இரண்டு கதைகளை வைத்து இருக்கிறேன் என்று இயக்கத்திலும் எனக்கு ஈடுபாடு உண்டு என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.