யாழ்மாவட்ட NPP அமைப்பாளராக தமிழர்களில் நம்பிக்கையான நபர்கள் இல்லை!

 


உள்ளுராட்சி சபை தேர்தலில் யாழ்மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளுராட்சி சபைக்கு கூட தாங்கள் விரும்பிய ஒரு நபரை வேட்பாளராக நியமிக்க முடியாத நிலையில் NPP சார்ப்பாக யாழ்மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் சென்ற நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.


கடந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்பாணத்தில் NPP இன் வெற்றிக்கு முக்கிய காரணமாக செயற்பட்ட அமைச்சர் சந்திர சேகரை கூட ஓரங்கட்டத் தொடங்கியுள்ளனர் இதற்க்கு காரணம் யாழ்பாணத்தில் தேர்தல் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு முன்னாள் Epdp மற்றும் அங்கயன் அணியின் இரண்டாம்/ மூன்றாம் கட்ட முக்கியஸ்தர்களுடனும் சில அதிகார மற்றும் ஊழல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுடனும் ஒரு டீலிங்கின் அடிப்படையிலே வாக்குகள் பிரிக்கப்பட்டு இந்த வெற்றி சாத்திய மாக்கப்பட்டது.


இவர்களுக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய இவர்களை தொடர்ச்சியாக ஆதரித்து வருவதும் அவர்களை காப்பாற்ற முற்படுவதுடன் அவர்களின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களில் அமைச்சரின் செல்வாக்கு நீள்வதுடன் அவர்களின் சுகபோக வாழ்க்கை மற்றும் ஆசைவார்த்தைகளில் அமைச்சர் விழுந்து விட்டமையுமே இதற்கான காரணமாக கருதப்படுகின்றது.


வடாகாணத்துக்கான உள்ளுராட்சி வேட்பாளர் தெரிவு மற்றும் அனைத்து விடயங்களையும் பிமால் ரத்னாயக்க நேரடியாகவே தனது விசுவாசிகளை வைத்து கையாள்கின்றார் இவரின் நேரடி வழிநடத்தலில் இவருக்கு ஆலோசனை வழங்கும் குழுவாக யாழ்பல்கலைகழக விரிவுரையாளர்கள் சிலரை உள்ளடக்கிய ஒரு அணி இயங்குவதுடன் அந்த குழுவில் உள்ள பல்கலைகழக விரிவுரையாளர் ஒருவர் விரைவில் பல்கலைகழக துணைவேந்தராக நியமிக்கப்பட போவதாக ஒரு பேச்சும் உலாவத்தொடங்கியுள்ளது. 


இதன் உச்சக்கட்டமாக யாழ்மாவட்ட NPP அமைப்பாளராக தமிழர்களில் நம்பிக்கையான நபர்கள் இல்லை என கூறி பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.