அனுராதபுரத்திற்கு ஒரு நாள் சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டது!


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் இருந்து தென்னிந்தியாவுக்கு புறப்படுவதற்காக, அனுராதபுரம் விமானப்படை தளத்திற்கு ஒரு நாள் சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான சட்டப்பூர்வ அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகிய வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டதாக, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்த ஒரு நாளுக்கான அந்தஸ்தின் கீழ், மோடியும் அவரது பாதுகாப்பு குழுவும் அனுராதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டனர். இந்நிலையில், தேவையான குடிவரவு மற்றும் குடியேற்ற அதிகாரிகள் அங்கு தற்காலிகமாக பணிக்கு நியமிக்கப்பட்டனர்.


இலங்கையின் விமான போக்குவரத்து விதிகளின்படி, சர்வதேச அந்தஸ்து இல்லாத விமான நிலையங்களில் இருந்து வெளிநாட்டுக்குப் புறப்படும் விமானங்களுக்கு அனுமதி இல்லை. எனவே, இது அரசாங்கத்தின் விசேட அனுமதி மற்றும் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இச்சூழ்நிலையின் மூலம், அனுராதபுரம் விமானப்படை தளம் வரலாற்றில் தனிச்சிறப்பான நாளாக பதிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.