பஸ் நிலைய மலசல கூடத்தை கட்டணமின்றி பயன்படுத்த அனுமதி!
பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட பொத்துவில் பஸ் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கான மல சல குடத்தை பொதுமக்கள் கட்டணமின்றி பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .
இது தொடர்பாக பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் ஏ ஜி ஏ முபாறக் எடுத்துக்கொண்ட நடவடிக்கையின் பயனாக, இன்று 2025.04.07 ம் திகதி முதல் பஸ் நிலைய மலசல கூடத்தை கட்டணமின்றி பயன்படுத்துவதற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கையில் சில்லறையின்றி, பணமில்லாமல் தமது மலசலகூட இயற்கை தேவைகளை பயன்படுத்த முடியாமலாகும் பிரயாணிகளுக்கு இந்த நடைமுறை மிகவும் பிரயோசனமாக இருக்கும் என்றும் இவ்வாறான காரணங்களினால் ஏற்படக்கூடிய உடல் உபாதை மற்றும் சுகாதார சீர்கேடுகளுக்கு பாதுகாப்பாக அமையும் என எதிர் பார்க்கப்படுவதாக பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
-எஸ் ஜே புஹாது-
கருத்துகள் இல்லை