இந்தியாவின் சக்திக்குக் கருணாவை கொலை செய்ய கொந்தராத்து கொடுத்த பிள்ளையான்!
கிழக்கு மாகாணத்தில் தமது இராணுவ அதிகாரத்தை பலப்படுத்தும் பலப் பரீட்சையில் ஈடுபட்டு வந்த கருணா
பிள்ளையான் தரப்புக்களின் அதிகாரப்
போட்டி கோட்டாபய ரணில் ஜனாதிபதிகளின் காலத்தில்
பிழையானுக்கு ஆதரவாக இருந்தது
இதனால் கருணா தனது பாதுகாப்பு கருதி தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கோட்டாபய
ஆட்சியின் போது கொழும்பு தெஹிவல
பகுதிக்கு இடம் பெயர்ந்தார்.
இருவரும் ஒரே கட்சி பயணித்த போதும்
கோட்டாபய அரசாங்கத்தில் இடம்
பெற்ற அனைத்து அரச பயங்கர கொலை சம்பவங்களுக்கும் நேரடியாக உதவி செய்த பிள்ளையானுக்கே
கோட்டாபயவின் முழுமையான ஆதரவு கிடைத்தது இதனால் கருணா
அதிருப்தி அடைந்து
கொழும்புக்கு பின் வாங்கினார்.....
பிள்ளையான் கிழக்கு மாகாணத்தை ஆண்டு கொண்டிருந்த காலப் பகுதியில் நாட்டின் பல்வேறு கொலை கிரிமினல் குற்றச் செயல்கள் அதிகரித்து வந்தன இந்நிலையில் 2015 இல் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின் 2005 இல் கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைக்காக பிள்ளையான்
சிறையில் அடைக்கப்படுகிறார்.....
பிள்ளையான் சிறையில் அடைக்கப் பட்டவுடன் கொழும்பில் இருந்து மீண்டும் மட்டக்களப்பு
சென்ற கருணா தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் புதிய கட்சியில
மீண்டும் அங்கு கிரானில்
புதிய கட்சியுடன் புதிய காரியாலயத்தை ஆரம்பித்து அரசியலை ஆரம்பித்தார்
இக்காலப் பகுதியில் பிள்ளையான் சிறையில் இருந்த போதிலும் கருணாவின் எழுச்சியை பொறுக்காத பிள்ளையான் பதவி இழந்திருந்த ராஜபக்ஷக்களின் உதவியுடன் கருணாவைவுக்கு முடிவு கட்ட திட்டம் தீட்டினார்.இதற்கு விடுதலை புலிகளின் புனருத்தாரனம் செய்யப்பட்ட இரண்டு வீரர்கள் பிள்ளையானின் இரண்டு துப்பாக்கி தாரிகள் என நால்வரை
அரசாங்க புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலேயின் உதவியுடன் கருணாவை கொலை செய்வதற்காக இந்தியாவின் சக்தி என்ற பெயருடைய
நபர் தலைமையிலான குழுவினருக்கு
கொந்தராத்து வழங்கப்படுகிறது.......
(ஈஸ்டர் தாக்குதலும் பயங்கரவாதியான
சஹ்ரானின் கூட்டமும் இந்தியாவின் அரச அல்லது குழுக்களின் ஆதரவுடன்
நடத்தப்பட்டதாகவே கூறப்படுகிறது)
இதற்கிணங்க கருணாவை கொலை செய்ய 2017.2.21 ஆம் திகதி வவுனியாவில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து கொண்டிருந்த சிவலிங்கம்
சுரேஷ் குமார் என்ற அந்த நால்வர் குழுவின் ஒருவர் ரீ 56
துப்பாக்கியுடன் பாதுகாப்பு தரப்பினரிடம் மாட்டிக்கொள்கிறார்
இவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இருந்தே கருணாவை கொலை செய்வதற்கான திட்டம் அம்பலத்துக்கு வருகிறது கருணாவை
கொலை செய்வதற்காகவே தான் மட்டக்களப்பு சென்று கொண்டிருப்பதாகவும் தனக்கு
இந்த கொந்தராத்தை வழங்கியவர் இந்தியாவின் சக்தி என்பவர்
எனவும் அவர் தகவல் வழங்கியுள்ளார்
இதனையடுத்து கருணா அன்று பொலீஸ் மா அதிபராக இருந்த பூஜித
ஜயசுந்தரவுக்கு பிள்ளையான்
தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளதை கடிதத்தில் எழுதியுள்ளார்
எனினும் நல்லாட்சி அரசில் பிரதமர் பதவிக்கு வந்த ரணில்
விக்ரமசிங்க மீண்டும் பிள்ளையானை
விடுதலை செய்கிறார் இவரை
விடுதலை செய்ததன் பின் நாட்டில
பல கோடூர குற்றச் செயல்கள் இடம் பெற்றுள்ளன. இவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
உட்பட ராஜபக்ஷ பிளாளையான் ஆகிய
முக்கூட்டினாலும் திட்டமிட்டு செய்யப் பட்டவை என்ற விடயம் தற்போது தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலம்
பெறப்பட்டு வருகின்ற பிள்ளையானால்
கூறப்பட்டு வருவதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன......
இவ்வாறு கடந்த அரசாங்க காலங்களில் இடம்பெற்ற கொலை மற்றும் கொடூர செயல்களுக்கு முன்னாள் அரச தலைவர்களின் பெயர்கள் கூறப்படலாம் என்ற அச்சத்திலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் பிள்ளையானுடன் தொலைபேசியிலும் தனியாகவும் பேசி அவரை அணுக முற்படுகின்றனர்
என்ற சந்தேகம் குற்றப் புலனாய்வு
அவர்களிடம் வலுப்பெற்று வருகிறது
கருத்துகள் இல்லை