என் கண்ணீரும் உப்பாகத்தான் சுரக்கிறது!
கடலும்_நானும் கடலே! நீ ...
அலைகளைக் கொண்டு வருகிறாய்.
நான் கவலைகளைக் கண்டு வருகிறேன்.
இடைவிடாத குளிர்ச்சியோடே நீ குதூகலிக்கிறாய்.
இடைக்கிடை மகிழ்ச்சியோடும் நான்
பதிலளிக்கிறேன்.
உன் ஆழத்தை யாரும்
அறியவும் முடியாது.
என் அன்பின் ஆழத்தை
எவரும் உணரவும் முடியாது.
நீ ஆர்ப்பரித்து எழுந்து பின்
அமைதியாகிறாய்.
நான் யார்மீதும் எரிந்துவிழாமல் மௌனமாகிறேன்.
உன் தண்ணீரும் உப்பாகத்தான்
உவர்க்கிறது.
என் கண்ணீரும் உப்பாகத்தான்
சுரக்கிறது.
உன்னைப் பார்த்து ரசித்துவிட்டுச் செல்கிறார்கள்.
என்னைப் பார்த்து சிரித்துவிட்டுச் செல்கிறார்கள்.
உன் கரையைத் தொடுவதற்கு
வெண்நுரைகள் வந்துபோகின்றன.
என் வாழ்வின் கனவை அடைவதற்கு முன்
வெண்நரைகள் வந்துபோகின்றன.
என்ன... ஒன்று மட்டும்
நீ என்னில் வேறுபடுகிறாய்
சிலநேரம் நீ
உயிர்களைக் காவுகொள்கிறாய்.
ஆனால்,
எந்நேரமும் நான்
உயிர்களைக் #காதல் கொள்கிறேன்.
-பிறேமா(எழில்)-
03.04.2015
கருத்துகள் இல்லை