பேர்லின் தமிழாலயத்தின் நான்கு ஆசான்களுக்கும் மதிப்பளிப்புகள்!📸
தமிழ்க் கல்விக் கழகத்தின் 35 வது ஆண்டு விழாவில் இம்முறை 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய
ஆசான்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு தமிழ் வாரிதி என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு தமிழ் மாணி என்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கி மதிப்பளிப்புகள் நடைபெற்றன. அந்த வகையில் பேர்லின் தமிழாலயத்தின் நான்கு ஆசான்களுக்கும் மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன. சிறப்பாக 25 ஆண்டுகள் பணியாற்றிய பேர்லின் தமிழாலய ஆசிரியை திருமதி சாவித்திரி தேவதாஸ் அவர்களுக்கு தமிழ் மாணி என்ற பட்டமும் , 30 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியை திருமதி யசிந்தா தம்பிப்பிள்ளை அவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கி மதிப்பளிப்புகள் நடைபெற்றன.பேர்லின் தமிழாலயம் பெருமை கொள்கின்றது.
கருத்துகள் இல்லை