இறக்காமத்தில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மடக்கி பிடிப்பு!📸
இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அரபா நகர் பகுதியில் நாளந்தம் யாசகம் பெறும் ஏழைத் தாயின் வீட்டில் இருந்த இரண்டு நெல் மூடைகள்,அங்கர் 400g, பேரிச்சம்பழம் என்பனவற்றை களவாடிய திருடர்கள் இருவரை இறக்காமம் போலீசார் கைது
செய்துள்ளனர்இறக்காமம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.பீ.பியந்த தலைமையிலான ,பொலீஸ் பரிசோதகர் சாந்த மற்றும் சார்ஜன்ட் கடாபி, பாஹிர், றியான் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சுற்றி வளைத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை மடக்கி பிடித்துள்ளனர்
(பூங்காவன நியாஸ்)
கருத்துகள் இல்லை