தையிட்டி தொடர்பாக ஏன் வழக்குத் தொடரவில்லை?
தையிட்டி தொடர்பாக ஏன் வழக்குத் தொடரவில்லை? அங்கு போராடுவது வீண், என்பது போன்ற வாதப் பிரதிவாதங்களைப் பார்த்தேன். இது கட்சி மற்றும் வாக்கு அரசியலில் உள்ள பெரும் துயரம். இதனால் தான் தமிழ் மக்கள் பலர் மேல் நம்பிக்கை இழந்தார்கள்.
சட்டரீதியாகப் போராடிப் பல நிலங்கள் விடுவிக்கப்பட்டது என்று ஒரு தரப்பு சொல்கின்றது. ஆனால் உண்மையில் அரசின் அனுசரனையில் நடக்கும் ஆக்கிரமிப்புக்கு சட்டத்தை விட மக்கள் போராட்டம் அவசியமானது.
அதி உயர் பாதுகாப்பு வலயம் என்பதை மட்டும் ஒரு பேசுபொருளாக எடுப்பது தவறு. தையிட்டி என்பது பெளத்தமயமாக்கல், சிங்களமயமாக்கல் அத்துமீறிய காணி அபகரிப்பு மற்றும் இனப்பரம்பலை மாற்றுவதற்கான வேலைத்திட்டம்.
இவை தான் நாம் அடையாளம் காணவேண்டிய முதன்மையான அரசியல் பிரச்சினைகள்.
திருகோணமலையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக கோணேசர் கோவிலுக்கு முன்னால் இருக்கின்ற சட்டவிரோதக் கடைகளை சட்டத்தின் உதவியோடும் அகற்ற முடியவில்லை.
திருகோணமலை குச்சவெளியில் 300க்கு மேற்பட்ட கைப்பற்றப்பட்ட சட்ட விரோத விகாரை இடங்களை அகற்ற முடியவில்லை.
கண்ணியாவில் இன்று வரை இருந்த கோவிலை மீள உருவாக்க முடியவில்லை
மயிலத்தைமடு மாதவனை மேய்ச்சல் தரையின் சட்ட விரோத ஆக்கிரமிப்பை இன்று வரை அகற்ற முடியவில்லை.
குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு முரணாக கட்டிய கட்டடத்தை அகற்ற முடியவில்லை , ஆனால் நீதிபதியே மிரட்டப்பட்ட நாட்டை விட்டுச் சென்றார்.
அரசாங்கம் செய்யும் சட்டவிரோதங்களுக்கு அரச கட்டுப்பாட்டில் உள்ள நீதித்துறையினூடாக என்ன செய்ய முடியும் ?
இப்பொழுது தென் இலங்கை வரை பேசு பொருளாக இருக்கும் ஒரே ஒரு போராட்டம் தையிட்டியின் மக்கள் போராட்டமே.
அது மொத்தமாக திட்டமிடப்பட்ட தமிழர் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கான அடையாளப் போராட்டம்.
இதே போல ஆயிரம் இடங்கள் இருந்தும் மக்கள் நம்பிக்கை இழப்பினால் பின்வாங்கி விட்டார்கள்.
தையிட்டி போராட்டம் தொடர்வதால் அடுத்த ஆக்கிரமிப்புகள் தடைப்படும். அந்தப் போராட்டம் வெற்றி பெற்றால் அது அனைவருக்குமான வெற்றி. எனவே அதிலும் அரசியல் செய்யாமல் அதன் தேவையை உணருங்கள்.
மக்கள் உரிமையோடு வாழ்வதை உறுதிப்படுத்திவே எம் வேலை.
கருத்துகள் இல்லை