சுண்டைக்காய் காரக்குழம்பு செய்வது எப்படி.!
தேவையான பொருட்கள்:
100 கிராம் சுண்டைக்காய்
1 சிறிய நெல்லிக்காய் அளவு புளி
1/2 மூடி தேங்காய்
3 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
150 கிராம் சாம்பார் வெங்காயம்
3 தக்காளி
1 ஸ்பூன் கடுகு
1 கொத்து கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
முதலில் சுண்டைக்காயை பாதியாக நறுக்கி கொள்ளவும்
கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் நறுக்கிய சுண்டைக்காயை போட்டு வதக்கவும்
புளியை கரைத்து கொள்ளவும்.. அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்க்கவும்
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
வெங்காயம் ஆறியதும் அதை மிக்ஸியில் அரைக்கவும்
புளிக்கரைசல் கொதித்தவுடன் அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும்
அதில் அரைத்த விழுதை சேர்க்கவும்
கொதிக்கும் போது அரைத்த தேங்காய் விழுதையும் சேர்க்கவும்
அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
இறுதியாக கொத்தமல்லி தழை தூவவும்
கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்..
சுவையான சுண்டைக்காய் காரக்குழம்பு தயார்...
#tamilarul #tamilnews #tamilshorts #news #tamil #hinduplaceofworship #sujiaarthisamayal
கருத்துகள் இல்லை