நாம்தமிழர் உறவுகளுக்கு!
அன்புள்ளம் கொண்ட நாம்தமிழர் உறவுகளுக்கு வணக்கம்,
தமிழின அழிப்பு மற்றும் தமிழின அடக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழீழத்தமிழர்களின் உரிமைப்போராட்டங்களுக்குத் துணைநின்றபடி காலத்தொடர்ச்சியின் போக்கில் தமிழகமும் இனமீட்புப் போராட்டங்களில் எழுச்சிகொண்டு நிற்பது அனைவரும் அறிந்ததே.
தமிழகத்தில் “நாம்தமிழர்” கட்சியின் எழுச்சிமிகு போராட்டங்கள் மூலமாக ஈழத்தமிழினத்தின் வரலாறு மீது சேறுபூசமுனைந்த பலர் அகற்றப்பட்டிருக்கிறார்கள். தமிழீழத்தேசியத் தலைவர் பிரபாகரனைத் தலைமையேற்று எழுந்துநிற்கும் அரசியற்கட்சியான நாம்தமிழர் கட்சியானது அண்மையில் JAAT என்ற திரைப்படத்திற்கெதிராகப் போராடி, அத்திரைப்படத்தைத் தமிழகத்திலிருந்து அகற்றியமை கண்டு உலகத்தமிழர்கள் அனைவரும் மிகு உளப்பூரிப்பு அடைந்தோமென்பது மிகையல்ல.
தமிழீழ அரசு இயக்கமற்று இருக்கும் இவ்வாறான இக்கட்டான காலப்பகுதியில், திரைப்படங்கள் வாயிலாக வெளிவரும் இவ்வாறான அவதூறுக் காட்சிப்படுத்தல்களை மக்களிடையே பரப்பும் அநாகரிகமான செயலுக்கு எதிராக உடனே வெகுண்டெழுந்து போராட்டம் நடாத்தி, தமிழீழத் தேசியத்தலைவரின் மாண்பு மீது நிகழ்த்தப்பட்ட அவதூறுத் தாக்குதலை இல்லாதொழித்த இப்பெருஞ்செயலுக்காக, நாம்தமிழர் கட்சியின் உறவுகளுக்குத் தலைவணங்கி எம் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழீழத்தேசியத்தலைவர் காட்டிய வழியில் என்றென்றும் ஒன்றித்திருப்போம். இயற்கை உங்களுக்கு நல்லருள் புரியட்டும்.
தமிழை வாழவைப்போம், தமிழ்மண்ணில் தமிழரையே ஆளவைப்போம்.
நன்றியுடன்;
ஜெயந்தன்
அனைத்துலக ஒருங்கிணைப்பாளர்
உலகத்தமிழர் உரிமைக்குரல்.
info@voicetamil.net


.jpeg
)





கருத்துகள் இல்லை