வலுப்பெறும் இந்திய-இலங்கை உறவு!

 


வலுப்பெறும் இந்திய-இலங்கை உறவு பிரதமர் மோடியின் வருகையும் மித்ர விபூஷண விருதும் இந்தியா ஞானபூரி. இலங்கை சிவபூமி.

இந்திய தேசத்தில் அமையப் பெற்ற, காலத்தால் முந்திய வொலயங்களை மன்னர் பெருமக்களே அமைத்தனர். உலகம் இவ்னமும் வியந்து நோக்குகின்ற தஞ்சைப் பெருங்கோவிலை இராஜராஜ சோழன் கட்டுவித்தான்.


அதன் வானுயர்ந்த கோபுரத்தின் நிர்மாணிப்பு விஞ்ஞான உலகை வியக்க வைத்துள்ளது. இதேபோல, இமயம் முதல் குமரி வரை அகண்ட பாரதம் இந்து சமயத்தின் விளைபூமி,


இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியடிகள் மிகச் சிறந்த இறை பக்தியாளர். கோட்சே என்பாள் காந்தியடிகளைத் துப்பாக்கியால் கடுகின்ற போது, ரகுபதி ராகவ ராஜாராம்... என்ற இராம நாம கீர்த்தனையே காந்தியடிகளின் இறுதி நாமார்ச்சனையாயிற்று.


ஆம். புனித ஸ்தலங்களும் புண்ணிய நதிகளும் சீவன்முத்தர்களும் சித்தர்களும் ஞானயோகிகளும் உற்பவமாகும் இந்திய தேசத்தின் பிரதமராக இருந்த அன்னை இந்திராகாந்தி, உருத்திராட்ச மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டே நாட்டை ஆட்சி செய்தார்.


மத சார்பற்ற நாடாக இந்தியா இருக்கின்ற போதிலும் இந்துக்களின் ஞானபூமியாகிய இந்தியாவில் இருந்து இந்து சமயத்தை பிரிக்கவோ தவிர்க்கவோ முடியாதென்பது நிறுதிட்டமான உண்மை.


பாரதிய ஜனதா ஆட்சி


உலகின் இரண்டாவது சவத்தொகையை உடைய இந்தியா உலகின் முதலாவது ஜனநாயக நாடு, அணி சேராமை அதன் கொள்கை, தர்ம சக்கரம் அதன் வாழ்வு, அன்னை இந்திராகாந்தி அறிவித்த அவசரகால நிலைமையைத் தவிர, இந்திய ஜனநாயகத்தில் எந்தப் பழுதும் இல்லை.


பல்லின மக்களையும் பல மொழிகளையும் மதங்களையும் தன்னகத்தே கொண்ட இந்திய தேசத்தின் தேசிய தேம் வங்கத்து மொழியில் அமைந்ததோடு இந்து, இஸ்லாம், சீக்கியம், பழங்குடி, ஹரிஜனம் என எந்தப் பேதமும் இல்லாமல் குடியாகத் தலைமையில் அமரக் கூடிய சமத்துவமும் அப்பெரும் தேசத்தில் இருப்பது பெரும் சிறப்பே.


இதை இங்கு கூறுவது இந்திய தேசத்தின் சமத்துவத்தை-அதன் ஜனநாயகச் சிறப்பை விழிப்பதற்காகவன்று.


மிகச்சிறிய இலங்கைத் தீவில் இருக்கக்கூடிய இவ, மத, மொழி வக்கிரத்தைக் கட்டுவதற்கே

இக் குறிப்பாகும்.


ஆம், 1978 இல் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன செய்த முதல்வேலை; உலகின் முதற் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறித்த தாகும்.


நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டு வந்து இந்த நாட்டை நாசமறுந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சியே இலங்கையில் அழிந்து போன பழம்பெரும் அரசியல், கட்சிகளில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.


இதையும் கடந்து நிறைவேற்று அதிகார முடைய ஜனாதிபதி ஆட்சி முறையால் இந்த நாடு ஜனநாயகத்தை இழந்து போகும் என்ற உண்மையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன உணர்ந்து கொண்டாலும் இலங்கையில் ஜனநாயகம் அழிந்தாலும் பரவாயில்லை தனது ஆட்சிக்கு எந்தப் பங்கமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதிலேயே அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார்,


அதன் விளைவை இப்போது நாடு அனுபவிக்கின்றது. இதையும் கடந்து, ஆட்சி மாற்றம் என்ற சித்தனை மக்களிடம்ன் ஏற்படுவதற்கும் ஜே.ஆரின் நிறைவேற்று அதிகாரமே காரணம் என்பது இங்கு உணர்தற்குரியது.


இஃது ஒரு புறமிருக்க, ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின்பான இந்தியக் காங்கிரஸின் செல்வாக்கு இறங்கு முகமாயிற்று என்பதை ஏற்றுத்தானாக வேண்டும். மன்மோகன்சிங் பொருளாதார விற்பன்னராக இருந்த போதிலும் அவர் ஒரு சிறந்த தலைவர் என்ற பெரு மையைப் பெறவில்லை. அதற்கு சோனியா காந்தியும் காரணம் என்பதைக் கூறித்தானாக வேண்டும்.


உண்மை. இத்தாலி தேசத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, நாசிம்மராவ், மஸ்மோகன்சிங் போன்ற இந்தியப் பிரதமர்கள் சுதந்திரமாக இயங்குவதைத் தடை செய்தார். இத் நிலைமையானது பாரதிய ஜனதாக் கட்சிக்கு சாதகமான சூழ்நிலையைக் கொடுத்தது.


அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பின்னர் பாரதிய ஜவதால் கட்சியிலிருந்து நரேந்திரமோடி அவர்கள் இந்தியாவின் பிரதமராகப் பதவி யேற்றார்.


பிரதமர் நரேந்திர மோடியின் அணுகு முறையானது உலகத் தலைவர்கள் அவரிடம் இருந்து நிறைவவே கற்க வேண்டும் என்பதை கட்டிதிற்கின்றது.


எந்த நாட்டுத் தலைவரையும் ஆரத்தழுவி அணைக்கின்ற அவரின் நட்பு அப்பளுக்கற்றது. ஆம். சம தோத்தில் ரஷ்ய அதிபருடனும் உக்ரைன் நாட்டு ஜனாதிபதியோடும் நட்புப் பாராட்டுகின்ற மிக உயர்ந்த ஆத்ம பலம் பிரதமர் மோடியிடம் உண்டு.


அதன் காரணமாகவே இலங்கை ஜனாதிபதி அதுரகுமார திஸாநாயக்கவை பிரதமர் மோடி ஆட்கொண்டார்.


தவிர, இந்தியாவுடன் அவ்வளவு உடன் பாட்டைக் கொண்டிராத ஜனாதிபதி அாகுமார திஸாநாயக்கவின் கையினால் மித்ர விபூஷண விருதைப் பிரதமர் மோடி பெற்றார் எனில், அண்டை நாடுகளுடன் அவர் கொண்டுள்ள நட்பும் அப்பளுக்கற்ற உறவும் எத்துணை உயர்வானதென்பது இங்கு நிரூபணமாகின்றது.


மோடி உரைத்த குறள்


மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த பிரதமர் மோடி இங்கு உரையாற்றுகையில், சிங்களத்தில் ஆயுபோவன் என்றும் தமிழில் வணக்கம் என்றும் விழித்துப் பேசினார்.


தனது பேச்சில் வள்ளுவப் பெருமானார் தந்த செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு


என்ற திருக்குறனைக் கூறித் தனது உரையை ஆற்றினார். மேற்குறித்த குறள் தரும் பொருள்; எதிரிகளிடம் இருந்து பாதுகாப்புப் பெற, நல்ல நண்பனும் நல்ல நட்பையும் தவிர பாதுகாப்பு அரணாக வேறு என்ன இருக்க முடியும் என்பதாகும்.


ஆக, எதிரிகளை வெல்லவேண்டுமாயின் நல்ல நண்பனும் நல்ல நட்பும் தேவை. அதாவது இந்தியாவின் அண்டை நாடான இலங்கை எப்போதும் இந்தியாவின் நண்ப னாகவும் நட்பு நாடாகவும் இருக்க வேண்டும். அதுபோல இந்தியாவும் இலங்கைக்கு அவ்வாறே. இவ்விதம் இரண்டு நாடுகளும் நட்போடு இருக்கும்கால் எந்த எதிரிகளாலும் எதுவும் செய்ய முடியாது.


இதை இலங்கை புரிந்து கொள்ன வேண்டும். இலங்கை புரிந்து கொண்டால் இலங்கையின் பாதுகாப்பு அரணாக இந்தியா இருக்கும் என்பதை பரதப் பிரதமர் நரேந்திர மோடி மிக நுட்பமாக எடுத்துக் கூறியுண்ணார்.


தலிரு, பிரதமர் மோடி தமிழகத்திற்கு விஜவம் செய்யும் போது எங்களம் தமிழில் மாற்றுவாரோ அது போல அவர் இலங்கைக்கு வருகை தந்த போதும் தமிழை முன்ளிளைப் படுத்தினார்.


அதாவது, பிரதமர் மோடியைப் பொறுத்த வரை இலங்கை தமிழ் பேசுகின்ற மக்களின் நாடு என்ற உணர்வோடு இருக்கின்றார் என்பதை இதாடு புரிந்து கொள்ள முடிகிறது.


விதுரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.