மாணவர்களுடன் தவறான நடத்தையில் ஈடுபட்ட அலன் சிறிதரனி்ன் வீட்டில் வைத்து கைது!
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 16 மாணவ சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி சிலருக்கு கடும் காயங்களை உண்டு பண்ணிய இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை இணைப்பாளராகவும் ஸ்ரீதரனின் முழங்காவில் பிரதேச இணைப்பாளராகவும் செயற்பட்டு வந்த அலன் என்பவர் இன்று பொலீசாரினால் இல 882, ஆறுமுகம் வீதி வட்டக்கச்சி கிளிநொச்சி என்ற சிறீதரனின் தனிப்பட்ட இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் பொலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேரடியாக பேசி குறித்த கைதை தவிர்க்கும் படி கேட்டிருந்த போதும் இச்சம்பவம் மனித உரிமைகள் ஆணைக்குழு வரைக்கும் சென்று இருந்தபடியால் குறித்த குற்றவாளி கைது செய்யப்படுவதை தவிர்க்க முடியாத நிலை இருப்பதாக பொலீசாரால் சுட்டிக் காட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
கருத்துகள் இல்லை