ஆனந்தபுரத்து நாயகர்கள்..!!📸


பிரிகேடியர், கேணல், லெப். கேணல் தரத்தளபதிகள் பலர், பலநூறுபோராளிகள் அறம் சிறிதுமற்றமுறையில் போரை எதிர்கொண்ட இடம் ஆனந்தபுரம்.


தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், 

பல நூறு போராளிகளை எதிர்கொண்டு, சுற்றிவளைத்த  15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைப்படைகள்,

பின்னரங்கிலும், முன்னரங்கிலும் நிலைகொண்டிருந்த இந்தியப்படைகள்,

சர்வதேசத்தின் சகலவிதமான உதவிகளையும் நயவஞ்சசகமாக பெற்றுக்கொண்ட இலங்கைப்படைகளை எதிர்த்து உக்கிரத்துடன் போர்புரிந்தன தமிழர்சேனைகள்.


உணவில்லை,ஆயுதவழங்கல் இல்லை, உதவிவருவதற்கான எந்தவாய்ப்பும் இல்லை.

ஆனாலும் கலங்கவில்லை எம் மறவர்கள்.

நிச்சயம் வீரமரணம் என்பதை தெரிந்துகொண்டு,

இந்த பூமிப்பந்தின் ஒப்பற்ற வீரவரலாற்றை வரைந்துகொண்டிருந்தார்கள் தமிழினத்தின் தெய்வமாந்தர்கள்.



புறமுதுகு என்ற பேச்சிற்கே இடமில்லை.

நெஞ்சில் குண்டேந்தி தாய்மண்ணை முத்தமிட்டுக்கொண்டிருந்தவர்களின் வீரவரலாற்றை நாம் எம் அடுத்தடுத்த சந்ததிகளிற்கு சொல்லிவைப்போம்.


புனையப்பட்ட காவியங்களையும், காப்பியங்களையும், இதிகாசங்களையும் போற்றிக்கொண்டாடும் நாம், எம் கண்முன்னே இரத்தமும், சதையுமாக வாழ்ந்த எம் காவியநாயகர்களின் வீரத்தை, ஈகத்தை, அவர்களின் ஒப்பற்ற உன்னதத்தை எம் வரலாறாக பதிந்துவைப்போம்.



இருந்த ஓரு உயிரையும் எமக்காக தந்தவர்களை கடவுளர்களை விட மேலானவர்கள் என கற்பிதம் கொள்வோம்.



ஆனந்தபுரம்..

தமிழினம் தலை நிமிர்ந்த வரலாறு எனக்கொள்க…


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.