நானும் ஆனந்தபுரமும்.!!
அப்போது அந்த வைத்தியர் யார் என்று எனக்கு தெரியாது அவருக்கு உதவியாக அவருடைய மாமா அங்கு இருந்தார் அவருடைய குடும்பமும் அதே வைத்தியசாலையில் இருந்தது என்று தெரியும்.
ஆனந்தபுர கோர தாண்டவத்தின் இறுதி நாள் வித்துடல்கள் கிடந்த கிடங்கிற்குள் மயக்க நிலையில் நான் இருந்தது தெரியாமல் வீரச்சாவு என்று நினைத்து என்னையும் போட்டு விட்டு சென்று விட்டனர்.
மயக்கம் தெளிந்து நான் அலம்பிக்கொண்டு கிடந்தேன் ஒருவர் எனது கைகளை பிடிக்க மற்றையவர் எனது இரு கால்களையும் பிடித்து தூக்கி கொண்டு வாகனத்தில் போட்டார்கள்.
பின் வைத்தியசாலையில் நான் பெரிய சத்தமாக கத்தினேன் நான் சாக போறன் சாகப்போறன் என கத்தினேன் அதற்கு முதல் தேசிக்காய் தண்ணி தாங்க என்று கத்த அங்கு இருந்த வைத்தியர் தம்பி நீ சாக மாட்டாடா கத்தாத என்றார்.
இல்லை நான் செத்திடுவன் எனக்கு தேசிக்கா தண்ணி கொடுங்க என மீண்டும் மீண்டும் கத்தினேன்.
முதல் 3 நாட்கள் உணவும் தண்ணியும் இல்லை கடும் தாகம் எனக்கு தேசிக்காய் தண்ணி குடிக்கனும் என்று கத்தினன்.
வைத்தியர் சொன்னார் தம்பி உடல் முழுவதும் காயம் நீ தண்ணீர் கூட குடிக்க கூடாது என்றார்.
வேதனை தாங்க முடியாது கடும் கெட்ட வார்த்தையால் வைத்தியரை திட்டினேன் வைத்தியரின் மாமா அங்கு இருந்தார் வைத்தியரின் மனைவியையும் கெட்ட வார்த்தைகளால் திட்டினேன்.
அப்போது அவரின் மாமா தம்பி நீ தண்ணி குடிச்சா செத்திடுவா என்றார்
நான் செத்தாலும் பரவாயில்லை தண்ணீர் தாருங்கள் என்று கதறினேன் பின் ஏதோ ஒரு துளி ஆ என்று சொல்லி அடி தொண்டைக்குள் விட்டார்கள்.
ஆனால் என்னால் தாங்க முடியவில்லை எவ்வளவு தூசனம் பேசியும் யாரும் என்னை கண்டிக்கவில்லை.
சேலேன் ஏற்றப்பட்டது கொஞ்சம் அமைதியாக இருந்தேன் நன்றாக இருட்டி விட்டது
சேலேனை கடித்து மட மட என குடித்துவிட்டேன் சிறிது நேரத்தில் எனக்கு பக்கத்தில் இருந்தவர் இறந்து விட்டார் என தூக்கி சென்றார்கள்.
பின் வைத்தியர் என்னை வந்து செக் பன்னினார் இவ்வளவு வேகமாக சேலேன் முடிந்துவிட்டதை பார்த்தவுடன் சேலேன் குழாயை செக் பன்னினார் நான் அதை கடித்து குடித்தது அவருக்கு தெரிந்து விட்டது.
இரண்டு கைகளும் கால்களும் கட்டப்பட்டது ஆனால் அவர்கள் என்னை அடிக்கவில்லை,
பின் மயக்கம் தெளிந்து பார்த்தவுடன் வைத்தியசாலையாக இயங்கி கொண்டு இருந்த ஒரு பாடசாலை காயப்பட்டவர்களுடன் படுத்திருந்தேன்,
பக்கத்தில் ஒருவன் பெரிய சத்தமாக கதிறி அழுதுகொண்டு இருந்தான் அண்ணேக்கு கையில காயம் எல்லாமே போய்ற்று எனி எதுவும் செய்ய முடியாது என இடை விடாமல் கத்தினார்,
எனக்கு எதுவும் புரியவில்லை பிறகு ஆறுதலாக கேட்டேன் அதன் பிறகு ஆனந்தபுரத்தில் நடந்தது பற்றி தெளிவாக கூறி கூறி அழுதார், அவர் ஓர் பொருப்பாளராக இருந்திருப்பார் ஆனால் அழுகையை நிறுத்தவில்லை,
உண்மையிலேயே நான் போராட்டத்திற்கு புதுசு ஆனந்த புரத்தில் சிக்குண்டு கிடந்த நேரம் எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை,
எங்களுக்கு அது பற்றி விளக்கமும் இல்லை, என் போன்ற பலர் அங்கு இருந்தார்கள் கோபித் அண்ணா வீரச்சாவு அடையும் வரை நாங்கள் அமைதியாகதான் இருந்தோம்.
வைத்தியசாலையில் என்னால் எழுந்து நிற்க முடியாது உடல் முழுவதும் 8 இடங்களில் காயம்
கட்டிலில் கிடக்கும் க,எனக்கு ஒட்டு துனியும் இருக்காது அந்தரங்கம் ஒரு துண்டு துனியால் மூடப்பட்டு இருக்கும் சலம் மலம் எல்லாம் அப்படியே போகும்,
ஒரு ஐயாவும் ஒரு சின்ன தம்பியும் என்னை சுத்தம் செய்வார்கள்,
இப்படி சில நாள் சென்றவுடன் தம்பி எனி நீ நடக்க பழக வேண்டும் என்றார்கள்,
நானும் கட்டிலில் இருந்து எழுந்து கீழ் கால் வைக்கும்போது விழுந்து விட்டேன் அப்படி பலமுறை நடந்தது,
எனியும் நடக்காமல் இருந்தால் சரி வராது என்று தடியை ஊண்டிக்கொண்டு டொய்லெட் போய் அங்கு விழுந்து எழும்ப முடியாமல் பல மணிநேரம் அதற்குள்ளே கிடந்தது என்னும் கண்களுக்குள் நிற்கிறது,
இந்த படத்தில் கிடப்பது நானா என்பது எனக்கு தெரியாது ஆனால் கையில் சிவப்பு நூல் வெடிபட்ட இடம் அந்த வைத்தியர் அவர் பக்கத்தில் ஒரு ஐயா இது எல்லாம் என் கண்களுக்குள் வந்து போகிறது,
தாயக விடுதலை போராட்டத்தில் எப்போதுமே நடக்காத பாரிய இழப்ப் ஆனந்த புரத்தில் நடந்தேறியது,
தேசிய தலைவர் கூறிய போன்று பலமுறை நூல் இழையில் உயிர் தப்பியது காலம் என்னும் ஏதோ ஒரு விடையத்தை செய்து முடிப்பதற்காக என்னை தயார் படுத்துகிறது என உணர்கிறேன் ...
இது நான் இல்லை 2009 முன் வாழ்ந்த போராளி கார்மேகனின் நினைவுகளில் இருந்து...
கருத்துகள் இல்லை