சித்திரைப் புத்தாண்டு 2025 விசுவாவசு வருடப்பிறப்பு டோட்முன்ட் சிவன் ஆலயம்!


13.04.2025 ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு 22.59 மணி


மெய்யடியார்களே!


சேர்மனி டோட்முண்ட் மாநகரில் எழுந்தருளி, அடியார்களுக்கு அருள் பாலித்துவரும் அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரப் பெருமான் ஆலயத்தில் சித்திரைப் புதவருடச் சிறப்பு அபிசேக அர்ச்சனை ஆராதனைகள் 14.04.25 திங்கட்கிழமை காலை, மாலை நடைபெற இறையருள் கைகூடியுள்ளது.


சித்திரைப் புதுவருடம் (விசுவாவசு வருடம்) 13.04.2025 ஞாயிற்றுக் கிழமை முன்னிரவு 22.59 மணிக்கு பிறப்பதனால் அடியார்களின் நலன்கருதி 14.04.25 திங்கட்கிழமை காலை 08.00 மணிக்கு காலைவேளைப் பூசை சிறப்பு அபிசேகத்துடன் ஆரம்பமாகும்.


அன்றைய தினம் 17.00 மணிக்கு ஆரம்பிக்கும் மாலை வேளைப் பூசையைத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசையும் அதன்பின் எம்பெருமானின் உள்வீதித் திருவுலாவும் நடைபெறும். அடியார்கள் வருகைதந்து எம்பெருமானைத் தரிசித்து, பேரானந்தப் பெருவாழ்வு பெற்றேகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்.


மதியம் அன்னதானம் நடைபெறும்.


13.04.25 ஞாயிற்றுக்கிழமை ஆலயம் திறந்திருக்கும் நேரங்களில் மருத்து நீரைப் பெற்றுக்கொள்ளலாம்.


14.04.25 சித்திரைப் புதுவருட தினத்தை முன்னிட்டு காலை 07.30 மணி 13.00 மணிவரையும் மாலை 04.00 மணி - 20.00 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்


10.04.25 வியாழன் பிரதோசம் பங்குனி உத்தரம். 21.04.25 திங்கள் நடேசர் அபிசேகம் 24.04.25 வியாழன் மணவாளக்கோலம் 25.04.25 வெள்ளிக்கிழமை


மேலதிகத் தொடர்புகளுக்கு :


0231 162377, 0231 4270431, 01728045421

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.