இன்று அட்சய திருதியை இரவு ஏலக்காய் பரிகாரம்!
இன்றைய தினம் அட்சய திருதியை. அவரவர் வாங்க வேண்டிய மங்களப் பொருட்களை வாங்கி, இந்த நாள் இனிதே நிறைவடைந்திருக்கும். முடிந்தவர்கள்
தங்கம் வெள்ளி இன்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கி இருக்கலாம். முடியாதவர்கள் அவரவர் நிதிநிலைமைக்கு ஏற்ப ஏற்ப மனதிற்கு சந்தோஷம் கொடுக்கும் பொருட்களை வாங்கி இருப்பீர்கள்.
எதுவாக இருந்தாலும் சரி கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்தது, நீங்கள் இந்த அட்சய திருதியை அன்று எந்த ஒரு பரிகாரமுமே செய்யவில்லை, எந்த ஒரு சுப காரியமும் செய்யவில்லை, எந்த ஒரு மங்கள பொருளையும் வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை.
உங்களுடைய பண பிரச்சனைகள் தீர, வருமானம் அதிகரிக்க செய்ய வேண்டிய ஒரே ஒரு ஏலக்காய் பரிகாரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகின்றோம். இன்று இரவு உங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, தூங்கச் செல்லும் போது, ஒரே ஒரு பச்சை நிற ஏலக்காயை மட்டும் உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின் சொல்லக்கூடிய மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு, அந்த ஏலக்காயை நீங்கள் சாப்பிட்டு விடலாம். ஏலக்காயை சாப்பிட்டு விட்டு தூங்குவது தான் அதி அற்புதமான பலனை கொடுக்கும்.
ஒரு வேலை உங்களுக்கு ஏலக்காய் சாப்பிட பிடிக்காது எனும் பட்சத்தில், அந்த ஏலக்காயை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, ஒரு தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள். மறுநாள் காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு அந்த ஏலக்காய் தண்ணீரை மட்டும் நீங்கள் பருகிக் கொள்ளலாம்.
தவறு கிடையாது. ஏலக்காய் தண்ணீர் குடிப்பதற்கும் வாய்ப்பு இல்லை என்பவர்கள், மந்திரத்தை சொல்லிவிட்டு இந்த ஏலக்காயை எடுத்து பணம் வைக்கும் பர்ஸிலோ அல்லது பீரோவிலோ வைக்கலாம். இதன் மூலமாகவும் உங்களுக்கு வருமானம் பல மடங்கு பெருகும். அட்சய திருதியை இரவு ஏலக்காயை கையில் வைத்துக்கொண்டு சொல்ல வேண்டிய எளிமையான மந்திரம் இதோ உங்களுக்காக.
அக்ஷய திருதியை மந்திரம்
ஓம் ஸ்ரீம் கனகதாரா போற்றி போற்றி ! ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே போற்றி போற்றி !
இவ்வளவுதான் இந்த எளிமையான இரண்டு வரி மந்திரத்தை நம்பிக்கையோடு செல்லுங்கள். இன்றோடு என்னுடைய பண கஷ்டத்திற்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்பேன். இனி வரக்கூடிய காலகட்டத்தில் என்னுடைய குடும்பத்திற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க முயற்சிகளை மேற்கொள்வேன் என்ற நம்பிக்கையோடு இந்த மந்திரத்தைச் சொல்லிப் பாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பணக்கஷ்டங்கள் தீரும். இன்று மட்டும் தான் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டுமா. நிச்சயம் கிடையாது.
இன்று தொடங்கி, தினம் தோறும் தூங்க செல்வதற்கு முன்பு பணகஷ்டம் தீர மகாலட்சுமியை வேண்டி இந்த மந்திரத்தை சொல்லி தூங்கி பாருங்கள். அடுத்த 48 நாட்களில் இருந்து 60 நாளுக்குள் உங்கள் பண கஷ்டம் ஒரு முடிவுக்கு வந்திருக்கும். கடன் சுமையை எல்லாம் கடந்து நீங்கள் வெளியே வந்து இருப்பீர்கள். எளிமையான இந்த ஆன்மீகம் பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.
கருத்துகள் இல்லை