வல்வையின் இந்திரவிழா தொடர்பாக குழுவின் அறிவித்தல்!
வல்வையின் இந்திரவிழா தொடர்பாக நெடியகாடு மோர்மட வரவேற்புக் குழுவின் அறிவித்தல்
புலம்பெயர் மற்றும் உள்ளூர் வல்வை மக்கள் அனைவருக்கும்...
அன்புள்ள உள்ளங்களே உங்களது மேலான ஒத்துழைப்பால் வல்வையின் இந்திர விழாவை கடந்த வருடம் (2024) சிறப்பாக நடத்தி முடித்திருந்தோம். உங்கள் அனைவருக்கும் விழா குழு சார்பில் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
( கடந்த 2024 ஆம் ஆண்டுக்குரிய கணக்கறிக்கையினை Nediyakadu web என்ற முகநூல் பக்கத்தில் காண முடியும் )
மேலும் இவ்வருடமும் இடம்பெற இருக்கும் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவ விழாவாகிய இந்திர விழாவினை (12-05-2025) சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு உங்கள் அனைவரதும் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் உதவிகளையும் நாடி நிற்கின்றோம்.
நன்றி
இங்கனம் நெடியகாடு மோர் மட வரவேற்பு குழு.
கருத்துகள் இல்லை