எங்கள் சபைகள் இவற்றை நாங்களே ஆளவேண்டும் யோசித்துப் பாருங்கள்!
ஒரு தனிச் சிங்கள பிரதேசத்திற்குச் சென்று ஒரு தமிழ் தேசியம் சார்ந்த கட்சி, அங்கே இருக்கிற சிங்களவர்களைப் பேரம் பேசியோ, மண்டையைக் கழுவியோ அல்லது விலைக்கு வாங்கியோ அதே மக்களின் வாக்குகளைக் கொண்டு அந்தப் பிரதேசத்தில் ஒரு பிரதேச சபையையோ ஒரு நகர சபையையோ ஒரு மாநகர சபையையோ கைப்பற்றி விட முடியுமா? முடியாது!
ஏனென்றால் அவர்கள் சுயமரியாதை உள்ளவர்கள், நாட்டுப்பற்றுள்ளவர்கள்.
அதுபோலவே முற்று முழுதாக இஸ்லாமியர் வாழுகின்ற ஒரு பிரதேசத்திற்கு சென்று அங்கே இருக்கிற இஸ்லாமியர்களை விலைக்கு வாங்கி அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற மக்களிடம் வாக்குகளைப் பெற்று, ஒரு தமிழ் தேசியம் சார்ந்த கட்சி அங்கு ஒரு மாநகர சபையையோ நகர சபையையோ பிதேச சபையையோ கைப்பற்றி விட முடியுமா? முடியாது!
ஆனால் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசத்தில், சிங்களவர்கள் தமிழர்களுடைய மண்டையைக் கழுவி தமிழர்களைக் கொண்டே தமிழருடைய வாக்குகளைப் பயன்படுத்தி சிங்கள கட்சிகள் சபைகளைக் கைப்பற்ற முடியும்! இஸ்லாமிய கட்சிகள் கூட சபைகளைக் கைப்பற்ற முடியும்! ஏனென்றால் தமிழர்கள் வாரி வழங்கும் பாரி வள்ளல் பரம்பரை.
கேட்டால் சிங்களவன் மோடையன் தாங்கள் படித்தவர்கள் என்பார்கள்!
இது உள்ளூராட்சி சபைத் தேர்தல்
இவைகள் எங்கள் சபைகள் இவற்றை நாங்களே ஆளவேண்டும்.
கொட்வின் தினேஷ்
கருத்துகள் இல்லை