இன்று தியாக அன்னை பூபதி அம்மாவின் 37வது ஆண்டு நினைவு நாள்!


1988ஆம் ஆண்டு இந்தியப் படைகளுக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தவர் அன்னை பூபதி. இவர் பத்துப் பிள்ளைகளின் தாய். ஆனாலும் தன் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்.


இவர் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் அன்னையர் முன்னணியின் முதன்மைச் செயற்பாட்டாளர்.


இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் பு*லி*களுக்கும் யுத்தம் நடைபெற்றபோது, விடுதலைப் பு*லி*களுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அன்னையர் முன்னணி சார்பில் போராட்டத்தை மேற்கொண்டார்.


அன்னையர் முன்னணியின் கோரிக்கைக்கு இந்தியப் படைகள் செவிசாய்க்கவில்லை.


இதனையடுத்தே அன்னை பூபதி மார்ச் 19 போராட்டத்தில் குதித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அன்னை பூபதி "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" என்று கடிதம் எழுதி வைத்தார்


நீர் மட்டும் அருந்தியபடி, உணவை விடுவித்து போராட்டத்தில் ஈடுபட்டார் அன்னை பூபதி. உண்ணா விரதப் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் கடத்தப்பட்டபோதும் இவரது உண்ணிவிரதப் போராட்டம் தொடர்ந்தது.


இந்திய படைகளினால் இவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சரியாக ஒரு மாத்தின் பின்னர் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்னை பூபதி உயிர் துறந்தார்.


தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது - மேதகு அவர்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.