வெற்றிக் கிண்ணத்தை இரண்டாக உடைத்த அமெரிக்க துணை ஜனாதிபதி!!
அமெரிக்காவில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில். ஓஹியோ மாகாண கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
, பட்டம் வென்ற ஓஹியோ அணி நேற்று வெற்றி கோப்பையுடன் வெள்ளைமாளிகைக்கு சென்று அங்கு துணை ஜனாதிபதி டேவிட் வென்சியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதன் போது புகைப்படம் எடுப்பதற்காக துணை ஜனாதிபதி வெற்றிக் கோப்பையைக் கைகளால் தூக்கிய போது கோப்பை இரண்டாக உடைந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பின்னர், கோப்பையின் மேல்பகுதியை மட்டும் கையில் எடுத்த வென்சி வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இச்சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கருத்துகள் இல்லை