ஏன் தமிழின துரோகியாக சித்தரிக்கப்படுகின்றார்கள்?


பதவிக்காக ஜேவிபி யின் பின்னால் அலைபவர்கள்; ஏன் தமிழின துரோகியாக சித்தரிக்கப்படுகின்றார்கள்?


ஈழத் தமிழர்களின் வரலாறு வீரத்தால் எழுதப்பட்ட அளவுக்கு துரோகத்தாலும் சிதைக்கப்பட்டிருக்கிறது.


தென்னிலங்கை அரசியல் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்களிடமிருந்து அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்றி மக்களை அதிகாரமற்றவர்களாக்கும் அரசியல் சதி ஏன் தமிழ் இனத் துரோகமாக பார்க்கப்படுகிறது... 


கடந்த காலத்திலும் டக்கிளஸ் தேவானந்தா, அங்கையன் போன்றவர்களை தமிழ்ச் சமூகம் துரோகிகளாகதான் அடையாளப்படுத்தியது. அதே காரணங்களுக்காகவே டோளர் கபிலனும்; தமிழினத் துரோகியாக பலராலும் சித்தரிக்கப்படு;கிறார். 


இலங்கையின் பூர்வீகக்குசுடிகளான தமிழ் மக்கள் இந்த மண்ணின் வந்தேறுகுடிகள் என்ற மகாவம்ச புனைகதைக்குள் மூழ்கியிருக்கும் தென்னிங்களை அரசியல் தலைமைகள் இலங்கைத்தீவை தனிச் சிங்கள பௌத்த நாடாக மாற்றும் நிகழ்ச்சி நிரலோடு இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து திட்டமிட்டு செயற்பட்டுவந்திருக்கிறார்கள். 


தமிழரின் தனித்துவத்தினைச் சிதைத்து மொழி கலாச்சாரம் பண்பாட்டை சீர்குலைத்து சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்த கடந்த 75 ஆண்டுகளில் பல அரசியல் சதிகளையும் வன்முறைகளையும் தென்னிலங்கைச் சிங்கள அரசுகள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருந்தமை வெளிப்படை. 


தமிழ் மக்களையும் சம உரிமையுள்ள இந்த நாட்டின் பிரஜைகளாக இருப்பதனை தென்னிங்கைச் சிங்கள தலைமைகள் ஒருபோதும் விரும்பியதில்லை. 


அதன் விளைவு ஆயுத வன்முறைகள் மூலம் தமிழ் மக்களது அரசியல் உரிமைக் கோரிக்கைகள் அடக்கி ஒடுக்கப்பட்டன.


 அந்த வன்முறையின் தொடர்ச்சி முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையில் தற்காலகமாக முற்றுப்பெற்றுள்ளது. 


எனினும் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எது காரணமாக இருந்ததோ அந்தக் காரணங்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு பின்னரும் இன்னமும் தமிழ் இனத்தினை அச்சுறுத்திக்கொண்டே இருந்துவருகிறது. 


தமிழ் மக்களுக்கு எதிரான ஆயுத வன்முறைகளை தென்னிலங்கைச் சிங்கள தலைமைகள் முன்னெடுத்திருந்தாலும் அந்த இனஒடுக்குதலுக்கான பின்தள வேலைகளை முன்னெடுத்துவந்தவர்கள் இரண்டு தரப்பினர். 


ஒன்று பௌத்த பிக்குகளைச் சாரந்த பல்வேறு அமைப்புக்கள். இரண்டாவது ஜனத்தா விமுக்தி பெரமுன என்ற ஜேவிபி அமைப்பு. 


பௌத்த பிக்குகளின் அமைப்புக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் தமிழ் மக்களை இலங்கையின் இரண்டாம் தர பிரஜைகளாக்கும் செயற்பாடுகளுக்கு அடித்தளமிட்டு தென்னிலங்கைச் சிங்களத்தலைமைகளுக்கு பின்புலமாக தீவிரமாகச் செயற்பட்டுவருகின்றார்கள். 


இந்த நோக்கங்களுக்காகவே தென்னிலங்கை ஆட்சிப்பீடத்தினை தீர்மானிக்கின்ற முக்கிய சக்தியாக அரசியலில் செல்வாக்குள்ள தரப்பாக பௌத்த பிக்குகள் அமைப்ப உருவாக்கப்பட்டிருக்கிறது. 


இந்த காட்சிக்குள் ஜேவிபி யின் வருகை சற்றுப்பிந்தியது. அடிப்படையில் இனவாத சித்தாந்தங்களை வரித்துக்கொண்ட ஜேவிபி ஆரம்பத்தில் சோசலிச சித்தாந்தங்களை மையமாக வைத்து இயங்கி வந்தாலும் 1989 ம் ஆண்டு அதன் தலைவர் றோகண விஜய வீரவும் அவரது சகாக்களும் கொல்லப்பட்டபின்னர் அதாவது 1990 களின் பின்னர் அரசியலுக்குள் பிரவேசித்த ஜேவிபி பெயரளவில் சோசலிச சித்தாந்தங்களையும் பெரியளவில் தமிழ்த்தேசிய விரோத நிலைப்பாட்டினையும் மையப்படுத்தி செயற்படத்தொடங்கியது.


 இடதுசாரித்துவம் என அது தன்னை அழைத்துக்கொண்டாலும் 1990 களின் பின்னர் இனவாத சித்தாந்தங்களையே அடிப்படையாக கொண்டிருந்தது. 


தமிழ் மக்களின் அரசியல் இருப்புக்கான உரிமைக் கோரிக்கைகளை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் ஜேவிபி தீவிரமாக இயங்கத்தொடங்கியது. 


ஆட்சிய்ல் இருந்த அரசுகள் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுப்பதனை ஜேபிவி ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்துவந்துள்ளது. 


ஆட்சியில் இருந்த அரசுகள் போர்முனையில் பெருமளவு தோல்விகளைச் சந்திக்கின்ற போதெல்லாம் பேச்சு மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண முற்படும் வேளைகளில் எல்லாம் இந்த ஜேவிபியினர் அந்த அரசுகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடாத்தி சிங்கள மக்களை அரசுக்கு எதிராக செயற்பட துண்டியிருந்தார்கள். 


அரசு போர்மூலம் தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்திவந்தார்கள். 


தமிழர் தாயகமான இணைந்த வடக்குக் கிழக்கை துண்டாட திட்டமிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து வடகிழக்கைத் துண்டாடினார்கள். 


2004 ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக வடக்கு கிழக்கில் பாரிய மனிதப் பேரவலம் நடந்திருந்தது. அந்த பேரனர்த்தத்திற்கு உதவிசெய்வதற்காக தமிழர் தரப்பினால் முன்மொழியப்பட்ட சுனாமி நிவாரணக்கட்டமைப்பை தடுத்து நிறுத்துமாறு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதனைத் தடைசெய்தார்கள். 


2002 ம் ஆண்டு புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது பேச்சுக்களை நிறுத்தி தமிழர்களுக்கு எதிரான யுத்த்தினை ஆரம்பக்குமாறு அரசுக்கு அழுத்தங்களை பிரயோகித்து தென்னிலங்கையல் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். 


இலங்கையில் இந்தகைய சமாதான எதிர்ப்பு போராட்டங்களை ஜேவிபியையும் புத்தபிக்குகளையும் தவிர வேறுயாரும் கடந்த காலத்தில் முன்னெடுத்ததில்லை. 


2006 இன் பிற்பகுதியில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு எதிராக கடுமையாக செயற்பட்டனர். பின்னர் தமிழர்களுக்கு எதிராக மகிந்த தரப்பு முன்னெடுத்த போருக்கு ஆதரவு திரட்டி தென்னிலங்கையில் ஜேவிபியினர் கிராமம் கிராமமாக திரிந்து சிங்கள மக்களின் ஆதரவை போருக்கு திரட்டிக்கொடுத்து மூர்க்கமான போர் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கபட்பட பின்புலமாக இருந்தார்கள். 


அது மட்டுமல்ல கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்து சிங்கள இளைஞர்களை இராணுவத்திற்கு திரட்டிக்கொடுத்து போரை தொர்ந்து முன்கொண்டு செல்ல உந்து சக்தியாக இருந்தனர். 


இறுதிப்போரில் வன்னியில் வாழ்ந்த 450000 மக்கள் போரினால் இடம்பெயர்ந்து வன்னியின் வடகிழக்கு பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டார்கள். 

மக்களது குடியிருப்புக்கள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம்கள் மீதும் கண்மூடித்தனமான விமானக்குண்டுவீச்சுத் தாக்குதல்கள் ஆட்டிலறித்தாக்குதல்கள் கொத்துக்குண்டுத் தாக்குதல்கள் எரிகுண்டுத்தாக்குதல்கள் துப்பாக்கிச் சூடுகள் என்பன மூலம் பல்லயிரக்கணக்கான அப்பாவிப்பொதுமக்கள் கொடூரமாகக் கொல்லப்ப்பட்டார்கள். 


இவ்வாறு குரூரமான இனப்படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அப்பாவிப்பொதுமக்களின் சாவுகள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வருகின்ற போது ஜேவிபியின் உறுப்பினரான இராமலிங்கம் சந்திரசேகரன் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர், அந்தச் செய்திகளை தினமும் மறுத்து அறிக்கைகளை விட்டுவந்தவர்.


 கொல்லப்படுவது பொதுமக்கள் அல்ல அவர்கள் புலிப்பயங்கரவாதிகள் என அரசின் இனப்படுகொலைச் செயற்பாடுகளை நியாயப்படுத்தினார். ஒரு தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்த ஒருவர் தன் இனத்தின் அழிவை நியாயப்படுத்தியவரெனில் அந்த கொலைகார மனிதனின் இயல்பை வெளிப்படுத்த வேறு விபரங்கள் தேவையில்லை. 


போரினால் இடம்பெயரந்து வன்னியின் பல பாகங்களுக்கும் அகதிகளாகிக்கொண்டிருந்த மக்களுக்கு வருமானமில்லை, உணவு கையிருப்பு இல்லை, மருந்து வசதிகள் இல்லை, போக்குவரத்து வசதிகள் இல்லை. மக்கள் அகதிகளாகி பெரும் துன்பத்தினை அனுபவித்தார்கள். வுன்னிமீது கடுமையான பொருளாதாரத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது. 450000 மக்கள் வாழ்ந்த சூழலில் வெறும் 50000 பேருக்கே உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதனையும் சந்திரசேகரன் வன்னியில் 50000 இற்கு குறைவான மக்களே வாழ்கிறார்கள். அவர்களுக்கு போதுமான உணவுப்பொருட்களை அனுப்பப்பட்டுவிட்டன என அரசின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு பக்கபலமாக இருந்த ஜேவிபியின் பேச்சாளர் அவர்.


இறுதிப்போரில் மாத்திரம் 145000 அப்பாவிப் பொதுமக்கள் மிகவும் குரூரமாக அரச படைகளால் கொல்லப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து வைத்திய வசதிகள் இன்றி உடல் அவையவங்கள் தொற்றுக்குள்ளாகியும் புழுப்பிடித்தும் பெரும் துயரங்களை அனுபவித்தார்கள். நூற்றுக்கணக்கான பெண்போராளிகள் கைதுசெய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். 


வன்னியில் வாழந்த 450000 மக்களின் சொத்துக்கள் உடமைகள் முழுவதுமான இராணுத்தினரால் சூறையாடப்பட்டது. மக்களின் குடியிருப்புக்கள் அழித்தொழிக்கப்பட்டன. தமிழ் மக்களின் சமூக பொருளாதார வாழ்வு முழுவதுமாக அழிக்கப்பட்டது. பல ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டார்கள். பல ஆயிரம் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டார்கள். 


இந்த இன அழிப்பின் முக்கிய பங்குதாரர்கள் ஜேவிபியும் புத்த பிக்குகளும். அதற்காக அவர்கள் ஒருபோதும் வருந்தவும் இல்லை. வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. 


தமிழ் மக்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் இந்த சந்திரசேகரனோ JVP யோ தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை நியாயப்படுதினார்களே ஒழிய ஒருபோதும் அதற்கு மனம் வருந்த வில்லை. 


இலங்கையில் இருப்பது பயங்கரவாதப்பிரச்சனை. இனப்பிரச்சனை ஒன்று எதுவும் இல்லை என்ற தென்னிலங்கை பேரினவாத சிந்தனையாளர்களின் சித்தாந்த்தில் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு இன அழிப்பின் மூலம் தாயக மண்ணில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களை ஓரம்கட்டி இலங்கையை சிங்கள பௌத்த நாடாக்கும் திட்டத்தினை மகிந்த அரசும் பின்னர் கோட்டாபாய அரசும் தொடர்ந்து முன்னெடுத்திருந்தன. 


பேரினவாத சிந்தனைக்குள் இருந்து வெளிவராத இனவழிப்பினைச் செய்த தென்னிலங்கை அரசுகள் முன்னெடுத்த தமிழ் மக்களை சிங்கள தேசிய நீரோட்டத்தில் இணைய வைக்கும் பல செயற்பாடுகளை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மக்கள் நிராகரித்தே வந்தனர். 


இதற்கு ஜேவிபி புதிய மூலோபாயங்களைவ வகுத்து பதவிக்கு விலைபோகக்கூடியவர்களை வைத்து அரங்கேற்றிவருகிறது. 


1990 களில் ஜேவிபி; அரசியல் நீரோட்டத்திற்கு வந்திருந்தாலும் அவர்களது கடந்தகால பயங்கரவாத நடவடிக்கை காரணமாக தென்னிலங்கை மக்கள் ஜேவிபி யை ஏற்றுக்கொள்ளவில்லை. 


1990 இல் அரசியல் பயணத்தினை ஆரம்பித்த ஜேவிபி 2024 வரை 3 பாராளுமன்ற ஆசனங்களுக்கு மேல் பெறமுடியவில்லை. கடந்த கால ஜேவிபியின் கறைபடிந்த வன்முறைக்கலாச்சாரம் சிங்கள மக்கள் மனதில் இருந்து நீங்காதிருந்தது. 


அதேபோல ஜேவிபியின் கடந்த கால தமிழின விரோத செயற்பாடுகளால் தமிழ் மக்கள் மத்தியிலும் ஜேவிபியால் பிரபல்யம் அடைய முடியவில்லை. 


சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஜேவிபிக்கு இருந்த கறையை போக்கி அரசியல் செல்வாக்கினை பெறுவதற்கு ஜேவிபிக்கு புதிய முகமூடி அணிவிக்க வேண்டிய தேவை கட்சியின் உயர்மட்ட தலைவர்களால் உணரப்பட்டது.


ஜேவிபியை பெயர் மாற்றம் செய்து அதன் கறைகளை போக்க திட்டமிட்ட ஜேவிபியின் முக்கயஸ்த்தர்கள் அதற்கு தேசிய மக்கள் சத்தி என பெயர் மாற்றம் செய்தது. தேசிய மக்கள் சக்தி என்பது ஜேவிபிக்குள் அமைக்க்ப்பட்ட அமைப்பே அன்றி அது ஒரு வெளியமைப்பல்ல.


ஜேவிபியின் கறைபடிந்த கடந்தகாலத்pன் அடையாளமாக இருந்த அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க செயலாளர் ரில்வின் சில்வா போன்றர்கள் ஜேவிபியில் இருக்க ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினராக இருந்த அனுர குமார திசாநாயக்கா தேசிய மக்கள் சக்தியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.  


இன்னமும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் முக்கிய திPர்மானங்கள் ஜேவிபியின் முக்கியஸ்த்தர்;களால் தான் எடுக்கப்படுகிறது. 


ஜேவிபி தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியுடன் தனது பழைய இனவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துவருகின்றது.


தேசிய மக்கள் சக்தியின் முக்கிய முடீவுகளை எடுக்கும் நபராக இன்னமும் ரில்வின் சில்வா செயற்பட்டுவருகிறார்.


 இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்ற சித்தாந்தத்தில் இன்னமும் ஜேவிபி அமைப்பு இம்மியளவும் பிசகாமல் பயணித்துக்கொண்டிருக்கிறது. 


புலிகளை அழித்தால் இலங்கையை சிங்கள பௌத்த நாடாக மாற்ற விடலாம் என்ற தென்னிலங்கை பேரினவாதிகளின் திட்டம் எதிர்பார்த்தது போல இலகுவாக அமையவில்லை. 


இலங்கையில் இருப்பது பயங்கரவாதப்பிரச்சனை என்ற போர்வையில் புலிகளை ஒழித்த பின்னரரும் தமிழ் மக்கள் அரசியல் உரிமை பற்றிப் பேசிக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் இணைய மறுக்கிறார்கள் என்ற ஆதங்கம் தென்னிலங்கை பேரினவாதிகள் மத்தியில் இருந்து வந்தது.


தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கொள்கைகளை கைவிட்டு இந்திய இலங்கை அரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் சறுக்கி விழுந்திருந்தாலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இனப்படுகொலை விவகாரம் இனப்பிரச்சனைக்கான தீர்வு விவகதாரங்களில் உறுதியாக இருந்து செயற்பட்டுவருவதனால் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்யும் தழிழ்த்தலைமைகள் தமிழர் பிரச்சினையை பொதுவெளியில் பேசவேண்டிய தேர்தல்களின் போது தமிழர் பிரச்சனையை மையப்படுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. 


இது தென்னிலங்கை சிங்கள பௌத்த பேரிவாத நிகழ்ச்சிநிரலுக்குள் இருந்து இயங்கும் ஜேவிபி உள்ளிட்ட தரப்புக்களுக்கு இலங்கையை பௌத்த சிங்கள நாடாக்கும் நிகழ்ச்சி நிரலை அமுலாக்க தமிழர் தரப்பு தமிழ்த்தேசியம் பேசுவதனை நிறத்த வேண்டும்.


 தமிழர் தரப்பு தமிழ்த்தேசியம் பேசுவதனை நிறுத்தவேண்டுமானால் தமிழ் மக்களிடம் இருந்து அரசியல் அதிகாரம் சிங்கள தரப்பின் கட:டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும். 


இது தமிழர் தரப்பில் மிஞ்சியிருக்கின்ற அரசியல் அதிகாரத்தினை கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குள் தென்னிலங்கை பேரிவாதத் தரப்பை தள்ளியுள்ளது.  


அதற்கு காரணம் இன்னமும் தமிழ் மக்கள் அரசியல் அதிகாரத்துடன் இருப்பதும் தமிழ்த்தேசிய சிந்தனையுள்ளவர்களிடம் இந்த அரசியல் அதிகாரம் இருப்துதான் காரணம். 


அந்த அரசியல் அதிகாரத்தினை இல்லாமல் ஆக்க வேண்டியது இந்த நாட்டை தனிச்சிங்கள நாடாக்கும் திட்டத்திற்கு அவசியமான முன்னாயத்த செயற்பாடாக உள்ளது. 


ஏற்கெனவே ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ள ஜேவிபி மேலும் தனது நாட்டை சிங்கள மயமாக்கும் திட்டத்திற்கு அடிமட்ட அதிகாரமும் தேவைப்படுகிறது. 


இந்த தேவைக்காக பதவிக்கு விலைபோகக்கூடிய றஜீவன், இளங்குமரன், கபிலன் போன்றவர்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறர்கள். 


இதில் றஜீவன் இளங்குமரனை விட கபிலன் பதவிக்காக ஜேபிவியின் காலில் விழுந்திருப்பது தமிழ் மக்களுக்கு அதிக குழப்பத்தினை உண்டுபண்ணும் விடயமாகும். 


காரணம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் கடந்த காலத்தில் தமிழ் மக்களது அரசியல் நலன் சாந்தே சிந்தித்து செயற்பட்டு வந்திருக்கிறது. 


உண்மையில் கடந்த காலத்தில் யாழ்பல்கலைக்கழகம் என்ற போர்வையில் தமிழ்த்தேசியம் சாரந்த செயற்பாடுகளில் மாணவர்கள் தான் ஈடுபட்டாரகளே ஒழிய கல்விமான்கள் புத்திஜீவிகள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் தரப்பு சுயநலமாகவே இருந்துவந்துள்ளது. 


இந்தப்புத்திஜீவிகள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் தரப்பு மாணவர்களுக்கு ஒழுங்காக கற்பிக்கவும் இல்லை. சமூகத்திகாக பொதுநோக்கோடு செயற்படவும் இல்லை. மாறாக பதவிகளுக்காகவும் சம்பள உயர்வுகளுக்காகவும் ஆளும் தரப்பின் காலை நக்குபவர்களாகதான் இருந்திருக்கிறார்கள். 


பல்லைக்கழக விரிவுரையாளர் ஜேவிபியின் பின்னால் பதவிக்காக போனால் அது தமிழ் மக்களையும் தவறாக வழிநடாத்தும் ஒரு செயற்பாடாக அமையும். 

பல்லைக்கழக விரிவுரையாளர்கள் சுயநலம் மிக்கவர்கள் பதவிக்கு விலைபோகக்கூடிய புத்தகப் பூச்சிகள் என்பது மக்களுக்கு தெரியாது. 


அதனால் கபிலன் என்ற நபரின் செயற்பாடு யாழ்பல்கலைக்கழக சமூகத்தின் நிலைப்பாடாக் மக்களால் பார்க்கப்படுவதற்குரிய சூழ்நிலை உருவாகியுள்ளது.


துமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலை கட்டவிழ்த்துவிட காரணமாக இருந்த ஜேவிபி தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனை இருக்கிறது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதுவே ஜேவிபியின் அதியுச்ச இனவாத சிந்தனையின் வெளிப்பாடு. 


அதனால் இனப்பிரச்சினையை தீர்க்க அரசியல் தீர்வ என்ற ஒருவிடயம் அவசியம் இல்லை என கூறிவருகிறது. 


இனிவரும் காலத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக் கோரிக்கையை முன்னெடுக்கமுடியாதபடி ஒரு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை தமிழர் தரப்பு ஆதரவுடன் முன்னெடுக்கவுள்ளது. 


அதில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் முற்றாக புறகக்ணிக்கப்படும். 


அது தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் பிரமுகர்களது ஆதரவுடன் நிறைவேற்றப்படும். 


பௌத்த விகாரைகள் வடக்கு கிழக்கில் வழமைபோல நிர்மாணிக்கப்படும். சிங்களமயமாக்கம் தமிழ் தலைவர்களின் ஆதரவோடு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும். இராணுவ ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து பேணப்படும். அரச நிர்வாகங்கள் சிங்களமயமாகும். இனப்படுகொலைக்கான நீதி என்பது நிரந்தரமான கிடப்பில் போடப்படும். 


இதனால் தமது பதவி ஆசைக்காக இந்த அரசுக்கு முண்டுகொடுக்கும் கபிலன் போன்ற தமிழர்கள் வரலாற்றில் தமிழனத்திற்கு துரோகம் இழைத்த டக்கிளஸ் தேவானந்தா போன்றவர்களின் துரோக பட்டியலில் இணைந்து கொள்வார். 

அதனால் தான் கபிலன் தமிழின துரோகியாக சித்தரிக்கப்படுகிறார்…..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.