கிளிநொச்சியில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குடும்ப நண்பரை காப்பாற்ற பின்வழியால் துடிக்கும் ரஜீவன் எம்பி!
கடந்த சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி கனிஷ்டா மகாவித்தியாலயத்தில் சிறு வயது மாணவர்கள் சிலர், அலன் எனப்படும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் (முன்னாள் புலிகள் இயக்க தளபதி) ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற விடயம் பெரும் பேசுபொருளாக சமூகவலைத்தளங்களில் இருக்கிறது.
குறித்த அலன் என்ற நபர் விடுதலைப்புலிகள் அமைப்பில் தளபதியாக இருந்து தடுப்பில் புணர்வாழ்வு பெற்று வெளியே வந்த ஒருவர் என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது.
குறித்த நபரை கைது செய்வதற்காக பொலீஸார் மற்றும் சிறுவர் நன்நடைத்தைப்பிரிவு அதிகாரிகள் தீவிரமாக செயற்பட்டுவருகிறார்கள்.
இந்தநிலையில் இந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று பொதுவெளியில் பில்டப் கதைகளை சொல்லிவிட்டு அலன் என்ற குற்றவாளியை காப்பாற்றும் பெரும் முயற்சியை NPP இன் ரஜீவன் எம்பி தீவிரமாக செய்வதாக ஆளுனர் தரப்பு கவலை வெளியிட்டுள்ளது.
உண்மை விடயத்தை அறிய முயற்சித்த போது, குறித்த குற்றவாளி அலன் என்ற நபர் ரஜீவன் எம்பியின் சித்தப்பாவின் நெருங்கிய நண்பராம். அதுமட்டுமில்லாது, ரஜீவனின் தன்னியடிக்கும் கிளிநொச்சி குழுவின் முக்கிய உறுப்பினராம்.
ரஜீவன் முன்னைய காலத்தில் தமிழரசுக்கட்சியில் சுமந்திரனின் செம்பாக இருந்த போது இந்த அலனுடன் சேர்ந்து பலமுறை தன்னியடித்ததாகவும், அலனுக்கும் ரஜீவனுக்கும் பல கொடுக்கல் வாங்கல் தொடர்புகள் இருப்பதாக உண்மை தகவல்கள் வெளிவருகின்றன. இதனால் தான் குற்றவாளி அலனை காப்பாற்றும் தீவிர முயற்சியில் மறைமுகமாக ரஜீவன் ஈடுபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு அயோக்கியனை காப்பாற்றும் முயற்சியை எடுக்கும் ரஜீவன் எம்பியை NPP அரசாங்கத்தில் வைத்திருக்க போகிறதா? அல்லது உடன் நடவடிக்கை எடுத்து நீக்குமா?
இந்த கள்வனை காப்பற்றும் ரஜீவன் போன்றவர்களை மக்கள் துரத்தியடிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை