சிரிக்கவும் சிந்திக்கவும்.....

 


நோயாளி : "டாக்டர், எனது மருந்துச் சீட்டில் இடது ஓரத்தில் நீங்கள் எழுதிய மருந்து மதுரையில எந்த மருந்துக் கடையிலும் கிடைக்கலையே.."

 டாக்டர்  :  "அய்யோ அது மருந்து இல்லைங்க, என் பேனா ஒழுங்கா எழுதுதா இல்லையான்னு  கிறுக்கிப் பார்த்தேனுங்க.

நோயாளி : என்ன....?

இதைத் தூக்கிகிட்டு மருந்தைத் தேடி  12 கடைகளுக்குச் கடை கடையா ஏறி இறங்கிருக்கேன்...

ஒரு கடைல, #நாளைக்கு வாங்க தாரேன்னு சொல்றாரு. 

இன்னொருத்தர்  என்டான்னா, இந்த மருந்துக் கம்பனிய  இப்போ #மூடிட்டாய்ங்க, வேறு கம்பனி தயாரிப்பு இதே மாதிரி மருந்தை தரட்டுமான்னு கேட்டாரு?

மூணாவதா போன மருந்துக் கடைக்காரர் சொன்னார், இந்த மருந்துக்கு மிகப்பெரிய டிமாண்ட்  இருக்கு அதனால கிடைக்காது, 10,000 ரூபாயாகும் #பிளாக்ல வேணும்னா வாங்கித் தரவான்னாரு.

நாலாவது கடைக்காரரால எனக்கு மயக்கமே வந்துருச்சி, இந்த மருந்து புற்றுநோய்க்கானது, உங்க வீட்டுல யாருக்கு #புற்றுநோய் இருக்குன்னு கேட்டாரு பாருங்க ?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.