தமிழ் உணர்வுள்ள தாய்ப் பால் குடித்து வளர்ந்த தமிழ் இரத்தமுள்ளவர்கள் JVPகு வாக்களிக்க கூடாது!


யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடமாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது:-


இன்று எமது கடற்றொழில் சம்மந்தமாக எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாதவர் ஆக்கபூர்வமாக முடிவுகளையும் எடுக்க முடியாத கையாலாகத கடற்றொழில் அமைச்சர்! 


கடற்றொழில் அமைச்சர் கடற்றொழில் சம்மந்தமான வேலைகளை விட்டுட்ட தனது கட்சிக்கு உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக தனது கட்சிக்கு பிரசாரம் செய்து திரிகிறார்.


இங்கு எவ்வளவோ பிரசினை இருக்கு அதற்கு முகம்குடுக்காமல் தனது கட்சியை வளர்த்துக் கொண்டு திரிகிறார்.


இந்திய இலங்கை மீனவர் பிரசினை பிரசினை தொடர்பில் பேசப்பட வேண்டும். தற்போது இந்திய மீனவர்கள் மீன்பிடி தடைக் காலத்தில் உள்ளனர் இந்த வேளையில் இரு நாட்டு மீனவர்கள் பிரசினையையும் பேசி ஒரு சிறந்த தீர்வுக்கு வர வேண்டும்.


எதிர் வரும் தேர்தலில் மக்கள் கூட்டாகவுள்ள கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் உதரிகளுக்கு அல்ல! 


தமிழ் உணர்வுள்ள தாய்ப் பால் குடித்து வளர்ந்த தமிழ் இரத்தமுள்ளவர்கள் JVPகு வாக்களிக்க கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.