சாதாரண சிங்கள மக்களுக்குக் கூட ஏன் இந்தப் பதட்டம் - இனவெறி?


கனடா  தமிழினப் படுகொலை நினைவுத் தூபிக்கு எதிராக ஒட்டு மொத்த சிங்களமும் கதறிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஏன் இந்த கொலைவெறி?



🟥 2009 இல்'தாம் வென்று விட்டோம்' என்று நம்பியிருந்தவர்கள் கடந்த வருடம் நாடு திவாலான போது  'தாம் தோற்றுப் போய் விட்டோம்' என்பதை உணர்ந்ததன் விளைவு இது.


🟥 கூடவே தாம் கடன்காரர்களாக்கப்பட்டு நாடு அன்னிய சக்திகளுக்விற்கப்பட்டு விட்டது என்பதைப் புரிந்து கொண்டதன் விளைவு இது.


🟥 இப்படி ஒரு நிலையில் எதிரி தனது இனத்தை விட்டுச் செல்லாதது மட்டுமல்ல அவர்களது இறைமையைப் பாதுகாத்து டயஸ்பொறா என்னும் அரசியல் - பொருண்மியப் பலத்தை தூர நோக்குடன் உருவாக்கி விட்டுச் சென்ற ஒரு தலைமை தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிறதே என்ற கோபத்தின் - இயலாமையின் விளைவு இது.


🟥 கூடவே லைக்கா, லிபரா தொடங்கி ராஜ் ராஜரத்தினம் வரை புலிகளின் - தமிழீழ அரசின் மூலதனம்தான் தம்மை பொருண்மிய ரீதியாகப் பாதுகாக்க அவர்களிடம் தாம்  அடகு வைக்கப் படுகிறோம் என்ற தோல்வி உளவியலின் - அவமானத்தின் விளைவு இது.


🟥 அத்தோடு தீவின் வரலாற்றில் 'சிங்கத்திற்குப் பிறந்தோம்' என்ற இழி வரலாறு - போலி வரலாறு  அண்மைக்காலமாக அவர்களைத் தொந்தரவு செய்வதன் விளைவு இது.


🟥 எல்லாவற்றையும் விட 1948 இல் வெள்ளையர்கள் வெளியேறிய பின் - குறிப்பாகக் கடந்த நாற்பது வருட போராட்ட வரலாற்றில் அவர்களுக்கு என்று ஒரு தலைமை கிடையாது - ஆளுமை கிடையாது - வரலாற்றுப் புருசர்கள் யாரும் உருவாகவுமில்லை.


ஆனால் தமிழர்களுக்கு ஒரு ஒப்பற்ற தலைவன். கூடவே திலீபன் தொடங்கி மாலதி, அங்கயற்கண்ணி, கிட்டு, சங்கர் என்று பல்லாயிரம் வரலாற்று நாயகர்களை உருவாக்கி விட்டுச் சென்றிருக்கிறது வரலாறு.


இது என்றுமே சரி செய்ய முடியாத மன நோயாளிகளாக அவர்களை மாற்றி விட்டது.


விளைவு, இந்தப் பதட்டம் - வன்முறை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.