தமிழின அழிப்பு தூபி சுவிஸ் நாட்டில் ஏன் அமைக்கமுடியவில்லை?

 


கனடா தேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு தூபி போன்றதொரு நினைவு தூவியினை சுவிஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் ஆகிய எங்களால் ஏன் அமைக்க முடியவில்லை? என்ற பெருந்துயர் என் சுவாசப்பையை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

இளையோர்களும், பொதுமக்களும் இணைந்தால் ஒரு சிறிய தமிழின அழிப்பு நினைவுக் கல்லையாவது எம்மால் அமைத்திட முடியும். 

இந்த வரலாற்றுப் பெரும் பணியை புலம்பெயர் சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்களாகிய எங்கள் சந்ததியும், எங்கள் இளையோர்களும் முன்னெடுக்க அனைத்து எமது தேசியம் சார்ந்த அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து பலம் சேர்க்க, சுவிஸ் அரசியலில் இயங்கும் எங்கள் இன உணர்வாளர்களும் வடம் பிடித்தால் வல்லமை சேரும். 

அன்று தஞ்சாவூரில் ஓர் முள்ளிவாய்க்கால் முற்றம், இன்று கனடா தேசத்தில் ஒரு தமிழின அழிப்பு நினைவுத் தூபி, நாளை நாம் வாழும் சுவிஸ் நாட்டில் ஒன்று கூடி மலர் தூவ ஒரு நடுகல். எம் அடுத்த சந்ததிக்கு நம் துயர் கூற ஒரு உரைகல். நிச்சயம் அமையப்பெற்ற வேண்டும். அதற்கு அந்த ஆத்மாக்கள் எம்மோடு துணை நிற்கும்.

எமது இந்த தலையாய கடமையில் எந்நேரத்திலும் நானும், என் சார்ந்த தமிழுணர்வார்களும் இணைந்து பயணிக்க தயாராக உள்ளோம்.

-கவுரிதாசன் விபுலானந்தன்-


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.