நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் கதிர்காம யாத்திரீகர்களின் சிறப்பு பூசைவழிபாடு!📸
முல்லைத்தீவு - பழையசெம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் கதிர்காம பாதயாத்திரீகர்கள் கலந்துகொண்ட விசேட பூசை வழிபாடுகள் 13.052025இன்று இடம்பெற்றது.
இந்த பூசை வழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
குறிப்பாக பல்வேறு இடங்களிலுமிருந்து கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தினூடாகவும் பலநூற்றுக்கணக்கான அடியவர்கள் பாத யாத்திரையாகச் செல்கின்றனர்.
இவ்வாறு காதிர்காமத் திருத்தலத்திற்குசெல்லும் பாதயாத்திரீகர்கள் பலரும் முல்லைத்தீவு - பழையசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தங்கியிருந்து விசேட பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டதுடன், அதனைத்தொடர்ந்து தமது பாதயாத்திரையைத் தொடர்ந்தனர்.











.jpeg
)





கருத்துகள் இல்லை