யேர்மனியில் போகும் நகரில் ஈகைச்சுடர் அன்னை பூபதி நினைவேந்தல்!📸
தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும் தமிழர் ஓருங்கினைப்பு குழு மற்றும் தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி, ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று (03.04.2025) சனிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் போகும் மாநகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழ் பெண்கள் அமைப்பு அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
ஈகைச்சுடரினை ஏற்றி வைக்கப்பட்டது . தொடர் மக்கள் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அணிவகுத்து சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வுகளாக விடுதலை பாடல்கள், விடுதலை நடனங்கள் கவிதைகள் இடம்பெற்றன.
ஈகைச்சுடர் அன்னை பூபதி நினைவாக நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு வெற்றி கேடயத்தை தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொருப்பாளர் அ.சிறிரவி அவர்கள் வழங்கி வைத்தார்.
ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியல் ஆலோசகர் திரு. திருநிலன் விசேடமாக மே18 , தாயக அரசியல், போண்ற பல விடயங்கள் விளக்க உரை ஆற்றியிருந்தனர்.
நிகழ்வின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்தது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
































































.jpeg
)





கருத்துகள் இல்லை