பிரான்சு அருள்மிகு மூகாம்பிகை உடனாய மூகேசுரர் கோவில் தமிழில் குடமுழுக்கு!

  சுவிற்சர்லாந்தின் பாசல் நகருக்கு அருகே பிரான்சு நாட்டின் முல்கவுஸ் நகரிலே “அருள்மிகு மூகாம்பிகை உடனாய மூகேசுரர் கோவில் வரும் 18.05.2025 அன்று குடமுழுக்கு நடைபெறவுள்ளது.


பிரான்சு நாட்டிலே முதன் முறையாக தமிழில் குடமுழுக்கு நடைபெறவுள்ள கோவில் இதுவாகும்.

திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா பெருந்திருக்குடமுழுக்கு (மகா கும்பாபிடேகம்)


18.05.2025 ஞாயிற்றுக்கிழமைவிடிகாலை 07.00 மணிக்கு திருச்சடங்குகள் தொடங்கப்படும்.


திருக்குடமுழுக்கு காலை 07.00 மணிமுதல் 11.50 மணிவரை நடைபெறும்.


ஐரோப்பாக கண்டத்தில் பிரான்சு நாட்டில் மூல்கவு நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மூகாப்பிகை திருவருளும்,தெய்வத்தமிழ் மெய்யறிவு திருப்பொருள் பெற்ற நால்வரும். ஐம்முகத்தான் துணையிருக்க. ஆறுமுகத்தான் அருகிருக்ககூசித்த சீலர்கள், செறிவு யோகியர், அறிவு ஞானியா, முனிவர்கள் திருவிறங்கிய இறையாளர்கள், பெருமான் அன்பர்கள் வலமவர். உயர்வு பெற்ற சைவ சிவத்தமிழ் குருமார்கள் அருள் நல்லாசி வழங்கி செந்தமிழ் ஓதிட திருவள்ளுவர் ஆண்டு 2056, உலக நிறைவு ஆண்டு (விசுவாவக) மேழத்திங்கள் (சித்திரை நீங்கள் 4ம் நாள் திருக்கடைக்குளம் (நடத்திராடம்) விண்ணமீன்சேர் அறுமைமதி (சஸ்டி) பொருந்திவரஇன்னிறை அமிழ்து (அமிர்த சித்தம்) ஓகமும் நிறைந்திருக்கும் காலை 06.00 மணிமுதல் வழிபாடுகள் தொடங்கப்பெற்று 08.00 மணிமுதல் 11:50 மணிவரை உள்ள திருநலவேளை அருள்மிகு மூகாம்பிகைத்தாயாகுக்கும். ஞானமிகு மூகேச்சுரப்பெருமானிற்கும், மூகேச்சுரம் திருக்கோவில் எழுந்தருளி அருளாட்சிசெய்யும் அனைத்து தெய்வங்களுக்கும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப்பெருவிழா நடைபெறர் திருவருளும் திருவருளும் நிறைந்து கூடியுள்ளது. தொண்டாகளும் மெய்யன்பர்களும், பொதுமக்களும் நடைபெறவுள்ள திருக்குடமுழுக்குப் பெருவிழாவிலும், ஏனைய வண்டமிழ்ச் சடங்குகளிலும் மேலும் இத்திருப்பணியில் பங்கெடுத்துக்கொண்டு பெருமானின் திருவருளைப் பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.