இந்தியா ஏன் பாகிஸ்தானிடம் அடி பணிந்தது ?
இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தால் பாகிஸ்தானால் இந்தியாவை வெல்ல முடியாது.
படைபலம் , பணபலம் என எல்லாவற்றிலும் இந்தியாவே மேலோங்கி உள்ளது.
ஆனால் ஒரு விடயத்தில் மட்டும் பாகிஸ்தானின் பலம் மேலோங்கி உள்ளது. அது அணு ஆயுதம்.
இதில் முக்கியமான விடயம் NFU கொள்கை.
அதாவது No first use , கொள்கை .
இந்தியா அணு ஆயுதத்தை முதன்முதலாக பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையில் உள்ளது.அதாவது பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் மட்டுமே இந்தியாவும் அணு ஆயுதத்தை பயன்படுத்தும்.
ஆனால் பாகிஸ்தான் NFU கொள்கையை பின்பற்றவில்லை. இந்தியா பலமான நாடு, எங்களால் அவர்களோடு போரில் ஈடுகொடுக்க முடியாமல் போனால் அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்ற கொள்கையில் உள்ளனர்.
இன்னும் தெளிவாக சொல்லனும் என்றால் ,
இந்தியாவின் தேவை போர் வெற்றி.
ஆனால் பாகிஸ்தானின் தேவை , "பாகிஸ்தான் போரில் தோற்றாலும்கூட பாகிஸ்த்தானை விட இந்தியா அதிக அழிவுகளை சந்திக்க வேண்டும்".
எப்படி பார்த்தாலும் போர் நடந்தால் இந்தியாவுக்கும் பாரிய இழப்பு வந்தே தீரும் என்று இந்தியாவுக்கும் தெரியும்.
கருத்துகள் இல்லை