முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு முன்பாக கடைத் தொகுதியில் தீ விபத்து!📸
முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் இன்று காலை (16) தீ பரவல் இடம்பெற்றது.
இந்த தீ பரவலானது முதலில் MVM உணவகத்தில் ஆரம்பித்து அருகில் உள்ள ANSAF பாதணிக் கடைக்கு பரவி அதிக தீ விபத்தாக மாறியது.
இதில் குறித்த உணவகம் மற்றும் பாதணிக் கடை முற்றுமுழுதாக எரிந்து அழிவடைந்துள்ளதோடு அருகில் உள்ள மேலும் இரு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இந்த தீபரவல் ஏற்பட்டதும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, கரைதுறைப்பற்று பிரதேச சபை, கடற்படையினர் , இராணுவத்தினர் விரைந்து நீர்த்தாங்கிகள் மூலம் தீ பரவலை காலை 9.30 மணியளவில் முற்றுமுழுதாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படைப்பிரிவு இல்லாமையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் உதவியை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நாடியிருந்தது. இருப்பினும் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதனால் கிளிநொச்சி மாவட்ட தீயணைப்புப் படைப்பிரிவின் உதவி கோரிக்கை இடைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தீயணைப்பு படைப்பிரிவின் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்ட செயலகம்
முல்லைத்தீவு
கருத்துகள் இல்லை