திணறும் இஸ்ரேலின் அயர்ன் டோம்!📸


ஒரு புதிய முறையைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்

நடத்தியுள்ளதால் அது இஸ்ரேலுக்கு பலத்த சேதத்தை அளித்துள்ளதாக இரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இது இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றையொன்று குறிவைத்துக்கொள்ளவும், பாதுகாப்புகளை தாண்டி பல இலக்குகளை வெற்றிகரமாக இரான் தாக்கவும் அனுமதித்தது என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அயர்ன் டோம் 100% அனைத்து ஏவுகணைகளையும் தடுக்கும் அமைப்பு இல்லை என்றும், வரவிருக்கும் நாட்கள் கடினமானவை என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இஸ்ரேல் மீதான இரானின் சமீபத்திய தாக்குதல்களில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளதால் இறப்பு எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. இந்த மோசமான தாக்குதலில் இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைஃபா உள்ளிட்ட பகுதிகளின் கட்டடங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.