கிழக்கிற்கு நிரந்தர மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனம் !


கிழக்கு, மத்தி, மேல் மாகாணங்களுக்கான நிரந்தர மாகாண கல்விப்பணிப்பாளர்களை அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழு நியமனம் செய்துள்ளது.


இக்கடிதங்களை கல்விச் சேவைக்குழு

கல்வி அமைச்சின் ஊடாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளது.


இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான (நிரந்தர)

மாகாண கல்விப் பணிப்பாளராக திருமதி.எஸ்.ஆர்.ஹசந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


திருமதி ஹசந்தி இதுவரை பதில்

மாகாண கல்விப் பணிப்பாளராக கடமை

புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


2005 ம் ஆண்டு இலங்கை கல்வி நிருவாக

சேவைக்கு திறந்த போட்டிப்பரீட்சை அடிப்

படையில் நியமனம் பெற்ற இவர் 2019 ல்

அச்சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டார்.


தற்போது கிழக்கு மாகாணத்தில் கடமையில் உள்ள இலங்கை கல்வி நிருவாக சேவை-1 உத்தியோகத்தர்களில் சேவை மூப்புக்கூடிய இவர் 50 வயதை தாண்டாத ஒரு திறமையான உத்தியோகத்தராவார்.


நீண்ட காலம் அம்பாறை வலயக் கல்வி

அலுவலகத்தில் கடமையாற்றிய இவர்

மாத்தறை மாவட்டத்தின் மித்தெனியவை

பிறப்பிடமாக கொண்டு அம்பாறையை

வாழ்விடமாக கொண்டவர்.


நிரந்தரமாக நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரை இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் 

கிழக்கு மாகாண சங்கம் மனதார வாழ்த்தி வரவேற்பதாக அச் சங்கத்தின் தலைவர் ஏ எல் எம் முக்தார் தெரிவித்துள்ளார்.


A L.Mohamed Mukthar.

Rtd.SLEAS-1, Advisor,SLEASOU

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.