வேகக்கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் புகுந்த உழவு இயந்திரம்.!!📸
வெல்லாவெளி காக்காச்சிவட்டையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் புகுந்த உழவு இயந்திரம்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காக்காச்சிவட்டை புளியடி வீதியூடாக கருங்கற்களை ஏற்றிக்கொண்டு பயணித்த உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வயலுக்குள் புகுந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் இன்றுகாலை பதிவாகியுள்ளது
இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன் நெற்பயிரும் உழவு இயந்திரமும் சேதமடைந்துள்ளது.
கருத்துகள் இல்லை