பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் விற்பனை தடை!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பின்படி, பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் விற்பனை செய்யும் செயற்பாடுகள் இன்று முதல் உடனடியாக நிறுத்தப்படுகின்றன.
இந்த முடிவு, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற நெரிசலையும் நீண்ட வரிசைகளையும் ஏற்படுத்தும் தனிப்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுத்தாபனத்தினால், இது தொடர்பான அறிவுறுத்தல் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்குத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையாக, இத்தடையை மீறுவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், நாட்டில் இரண்டு மாதங்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
எரிபொருள் விநியோகம் வழமை போல் நடைபெற்று வரும் நிலையில், தவிர்க்கக்கூடிய அச்சங்கள் மற்றும் நெரிசல்கள் உருவாகாதிருக்க, பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை