லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா!📸
ஆக்ஸ்போர்ட்டில் உலக தமிழர் வரலாற்று மையம் வளாகத்தில் திருவள்ளுவர் சிலையினை ஆக்ஸ்போர்ட் மாநகரத்தின்
கவுன்சிலர்கள் ஸ் ரீபன் வூட் , சூசான் அன்ட் - மாஸ்கெல் கெலன் முன்னிலையில் விஜிபி உலக தமிழ் சங்கத் தலைவர் டாக்டர் வி ஜி சந்தோசம் அவர்கள் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அருகில் க்ளைடன் மேயர் அப்புசாமி அவர்கள், மோரிசியஸ் மு அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் , லண்டன் சிவா பிள்ளை , ஆஸ்திரேலியா எழுத்தாளர் சந்திரிகா சுப்பிரமணி , துபாய் மொய்தீன் , ஆலந்தூர் மோகனரங்கன் அறக்கட்டளையின் பாட்டழகன் , முனைவர் உலகநாயகி பழனி மற்றும் 20 நாடுகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.விஜிபி திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்கு தமிழக முதல்வர் அவர்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை