மோதலில் அமெரிக்கா தலையிட்டால் முழுமையான போர் வெடிக்கும்!

 


இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமான மோதலில் அமெரிக்கா தலையிட்டால் முழுமையான போர் வெடிக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது .

மத்திய கிழக்கு இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமாக மாறிக்கொண்டிருக்கிறது. 


இந்நிலையில், அமெரிக்கா இந்த மோதலில் தலையிடும் பட்சத்தில், அதுவே முழுமையான பிராந்திய போருக்கான நடவடிக்கையாக அமையுமென ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அல் ஜசீரா ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில், ஈரான் வெளிவிவகாரத் துறை பேச்சாளர் எஸ்மாயில் பகாயீ கூறியதாவது:


அவர் மேலும் தெரிவித்ததாவது:


'நாங்கள் அரபு நாடுகளுடன் நல்லுறவுகளில் இருக்கிறோம். 


இஸ்ரேல், மற்றவர்களை போரில் இழுப்பதற்காக திட்டமிட்டு செயல்படுகிறது என்பதை அவர்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். 


எங்கள் அரபு சகோதர நாடுகள், அமெரிக்காவின் படைகள் தங்கியுள்ளன என்றாலும், அந்த நிலப்பரப்புகளை முஸ்லிம் அணிமுக நாடுகளுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம்.'


முதலில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஒதுங்கியிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தற்போது மிகப்பெரிய அளவிலான தலையீடிற்குத் தயார் என சுட்டிக்காட்டியதாக ஈரான் வெளிவிவகாரத் துறை பேச்சாளர் குற்றம் சுமத்தியுள்ளாhர்


அமெரிக்க ஜனாதிபதி கூறியது:


'நான் போர் நிறுத்தத்தை விட, அதைவிட பெரியதென்றே விரும்புகிறேன்.'


அமெரிக்கா தற்போது மேற்காசியத்திற்கு கூடுதல் போர் விமானங்களை அனுப்பியுள்ளது. 


அதோடு, ருளுளு Niஅவைண என்ற விமான தாங்கி கப்பலையும் அனுப்பியுள்ளது.


செவ்வாய்கிழமை, டிரம்ப் ஈரானிடம் 'நிபந்தனை இன்றி சரணடை' கோரிக்கை விடுத்தார். 


மேலும், ஈரானின் உச்ச தலைவர் அலி கமெனெயி குறித்து மிகவும்கொடூரமான மிரட்டலையும் வுசரவா ளுழஉயைட தளத்தில் பதிவிட்டார்:


'எங்களுக்குத் தெரியும், அந்தக் கமெனெயி எங்கே ஒளிந்திருக்கிறார். 


அவா இலகுவான இலக்கிலே தான் உள்ளார்

ஆகையால் இப்போது அவரை எங்களால் எளிதாகக் கொல்லலாம், ஆனாலும் தற்போது அதை செய்யப்போவதில்லையென அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் ஈரானின் ஏவுகணைகள் அடைவுள்ள தூரத்திலேயே உள்ளன. 


இதன் காரணமாக, எந்தவொரு தாக்குதலும் பெரிய போர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.


அதே நேரத்தில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளது. 'எந்த தாக்குதலுக்கும் கடும் பதிலடி கொடுப்போம்' என எச்சரி

த்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.