யாழில் 35 வருடங்களின் பின் அம்மனை வழிபட அனுமதி!

 


கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்திற்கு (தற்போதும் ஆலயத்திற்கு மட்டும் செல்லவே அனுமதி) கடந்த 06 மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்து இருந்தனர்.எனினும் , இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்


அதேவேளை யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் ராசிக குமார , வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகனை நேற்றைய தினம் சந்தித்தார்.இதன் போது, விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரி விடுத்தமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.