சிக்கன் 65 .!
தேவையான பொருட்கள் :
பொருள்அளவு
எலும்பில்லாத சிக்கன்கால் கிலோ
சிக்கன் பவுடர் 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் கால் டீஸ்பூன்
பூண்டு பல் 3
கறிவேப்பிலை 1 கொத்து
தயிர் கால் கப்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு அதில் சிக்கன் பவுடர், இஞ்சி பூண்டு விழுது, கேசரி பவுடர், தயிர், உப்பு சேர்த்து பிசறி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.
வேறொரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
தாளித்தப் பொருட்களை பொரித்த சிக்கன் மீது தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் 65 ரெடி.
கருத்துகள் இல்லை